நாதகஇடும்பாவனம் கார்த்திக் மற்றும் வீரப்பன் மகள் வித்யா ராணி சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா? வெளியான முழுவிவரம் இதோ! – ntk candidate idumbavanam karthik and veerappan’s daughter vidya rani asset details

நாம் தமிழர் கட்சியின் முக்கிய வேட்பாளர்களான இடும்பாவனம் கார்த்திக் மற்றும் வீரப்பன் மகள் வித்யா ராணி உள்ளிட்டோரின் சொத்து விவரம் தற்பொழுது வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள்
நாம் தமிழர் கட்சியின் முக்கிய வேட்பாளர்களின் இடும்பாவனம் கார்த்திக் மற்றும் வீரப்பன் மகள் வித்யா ராணி ஆகியோர் உள்ளனர் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தொகுதியில் இடும்பாவனம் கார்த்திக்கும், தர்மபுரி மாவட்டம் மேட்டூர் தொகுதியில் வீரப்பன் மகள் யா ராணியும் வேட்பாளர்களாக களமிறங்க உள்ளனர். இவர்கள் இருவரும் சட்டமன்ற தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த சூழலில் வேட்பு மனு தாக்கல் பிரமாண பத்திரிகையில் அவர்களது சொத்து விபரங்கள் வெளியாகியுள்ளது இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல்
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல்

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி மொத்தம் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அந்த வகையில் நாம் தமிழர் கட்சி 234 சட்டமன்ற தொகுதிகளில் தனித்து போட்டியிடுகிறது அதில் 117 ஆண் வேட்பாளர்களும், 117 பெண் வேட்பாளர்களும் போட்டியிட உள்ளனர். இதை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரையில் பொதுக்கூட்டத்தை நடத்தி அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

வேட்பாளர்களை ஆதரித்து சீமான் பிரச்சாரம்
 வேட்பாளர்களை ஆதரித்து சீமான்  பிரச்சாரம்

இதனைத் தொடர்ந்து மாவட்டம் வாரியாக சீமான் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார். மறுபுறம் ஒவ்வொரு வேட்பாளரும் தங்களுடைய தொகுதிகளில் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் ஆதரவை பெற போராடி வருகின்றனர். இந்த நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரான இடும்பாவனம் கார்த்திக் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

இடும்பாவனம் கார்த்திக் சொத்து மதிப்பு
 இடும்பாவனம் கார்த்திக் சொத்து மதிப்பு

அதில் அவரது சொத்து விபரங்கள் வெளியாகி உள்ளது. அதில் சொத்து மதிப்பு ரூ. 51,273 ஆகும் இதில் கையில் 30 ஆயிரம் ரூபாயும் இரண்டு வங்கி கணக்குகளில் சேர்த்து 21,237 ரூபாய் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தங்கம் வீடு கார் பைக் போன்ற எந்த நிலையான சொத்தும் அவரது பெயரில் இல்லை என்று இடும்பாவனம் கார்த்திக் பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.

_vidhya rani
_vidhya rani