Aadhav Arjuna About Thirumavalavan,தேர்தலில் போட்டியிட ஆசைப்பட்ட திருமாவளவன் நான்கு நாட்களில் முடிவை மாற்றியது ஏன் ?திமுகவின் சூழ்ச்சி தான் காரணம் : ஆதவ் அர்ஜுனா – tvk aadhav arjuna comments on thirumavalavan withdraw from election

விசிக தலைவர் திருமாவளவன் இந்த தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அறிவித்துவிட்டார். இதனால் பல சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில் இதுகுறித்து தவெகவின் ஆதவ் அர்ஜுனா விளக்கம் கொடுத்துள்ளார்

முக்கிய அம்சங்கள்:

தேர்தலில் இருந்து விலகிய திருமாவளவன்

ஆதவ் அர்ஜுனா கருத்து

aadhav arjuna about thirumavalavan
சட்டமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தை கட்சித்தலைவர் திருமாவளவன் தான் போட்டியிடவில்லை என அறிவித்தது தான் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கின்றது. கடந்த வாரம் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான பணிகளை மேற்கொண்டு வந்த திருமாவளவன் திடீரென ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்தார் ? எதற்காக தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகினார் என்ற கேள்வி எழுந்தது.இதற்கு திருமாவளவனும் விளக்கம் கொடுத்திருந்தார். நான் யுக்திகளை மாற்றியுள்ளேன், அதன் காரணமாக தான் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்ற முடிவை எடுத்தேன். இந்த முடிவு எந்த அழுத்தத்தினாலோ எடுக்கப்பட்ட முடிவு இல்லை. முற்றிலும் என் தனிப்பட்ட முடிவு தான். எனது யுக்தியில் மாற்றம் செய்கின்றேன். எனக்கு பதிலாக மறைந்த தலைவர் இளைய பெருமாளின் மகன் ஜோதிமணி போட்டியிடுவார் என தெரிவித்தார் திருமாவளவன்.
இந்நிலையில் திருமாவளவனின் இந்த முடிவிற்கு முழுக்க முழுக்க திமுக தான் காரணம், அவர்கள் கொடுத்த அழுத்தத்தினால் தான் திருமாவளவன் இந்த முடிவை எடுத்தார் என்கின்றனர் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள். அந்த வகையில் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவும் திருமாவளவனின் இந்த முடிவிற்கு திமுக கொடுத்த அழுத்தம் தான் காரணம் என தெரிவித்து இருக்கின்றார்.
அவர் கூறியது, ஒரு வாரத்திற்கு முன்பு தேர்தலில் போட்டியிடுவது குறித்து திருமாவளவன் சந்தோஷமாக பேசினார். மாநில அரசியலுக்கு வருகின்றேன் என மிகவும் சந்தோஷமாக பேசினார் திருமாவளவன். காட்டுமன்னார்கோவிலில் நான் போட்டியிடப்போறேன் என தெளிவாக கூறினார் திருமாவளவன். ஆனால் இப்பொது தேர்தலில் போட்டியிடவில்லை என கூறியிருக்கின்றார்.
இதற்கு திமுக தான் காரணம். திமுககட்சியின் சூழ்ச்சியே இதுதான். தங்களின் கூட்டணி கட்சிகளை கைப்பற்றுவது தான் அவர்களது திட்டமாக உள்ளது. மிகப்பெரிய அரசியல் கட்சி தலைவரான திருமாவளவன் முதலில் தேர்தலில் போட்டியிட ஆசை இருந்தது என்றார். தற்போதும் கூட அவர் பேசும்போது, எனக்கு தேர்தலில் போட்டியிட ஆசை இருந்ததாகவே கூறினார். அந்த ஆசை ஏன் ஒரு வாரத்திற்குள் மாறியது என்பது தான் என் கேள்வி.
திருமாவளவன்தற்போது மாநில அரசுக்கு திரும்ப வேண்டும் என்பது தான் தலித் சகோதரர்களின் வேண்டுகோளாக உள்ளது. ஆனால் இப்படி ஒரு முடிவை திருமாவளவன் எடுக்க திமுக தான் காரணம், இதெல்லாம் சரியில்லை. திருமாவளவன் போன்ற ஒரு அரசியல் கட்சித்தலைவர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு இருக்க வேண்டும். ஆனால் அவர் சட்டமன்ற உறுப்பினராக இருக்க கூடாது என திமுகவினர் நினைக்கின்றனர்.
ஆனால் அவரை கேட்டால் நான் மற்றவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தேன் என சொல்கின்றார்.இருப்பினும் அனைவருக்கும் தெரியும் திருமாவளவன் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட ஆசைப்பட்டார் என்று என கூறி திமுகவை குற்றம்சாட்டினார் ஆதவ் அர்ஜுனா. இவ்வாறு தான் எதிர்க்கட்சியின் ஆதரவாளர்களும் இதெல்லாம் திமுகவின் சூழ்ச்சி என கூறி வருகின்றனர்.
இந்நிலையில் திருமாவளவன் இதுபோன்ற சூழ்ச்சியில் சிக்கும் தலைவர் இல்லை என்பது தான் பெரும்பாலானோரின் கருத்தாக இருந்து வருகின்றது. ஒரு சில மாதங்களுக்கு முன்பு கூட்டணி குறித்து திருமாவளவன் பேசுகையில், திருமாவளவன் ,திமுக கூட்டணியில் ராமதாஸ் தரப்பு கட்சி இணைந்தால் நாங்கள் கூட்டணியை விட்டு செல்வதை தவிர வேறு வழி இல்லை என வெளிப்படையாக பேசினார்.
கூட்டணி வைத்திருப்பது கொள்கையின் அடிப்படையில் தான். அந்த கொள்கையில் சமரசம் செய்யும் நிலை வந்தால் கூட்டணியில் தொடரமாட்டோம் என திருமாவளவன் வெளிப்படையாக பேசினார். அப்படி பேசும் ஒரு அரசியல் கட்சி தலைவர் சூழ்ச்சியின் காரணமாக தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து வெளியேறி இருக்க மாட்டார் என்பதே பலரது கருத்தாகவும் உள்ளது.

திருமா எடுத்த அதிரடி முடிவு…இது தான் காரணமா?

ஆனால் அதிமுக உட்பட திமுகவை எதிர்க்கும் கட்சிகள் எல்லாம் இதெல்லாம் திமுகவின் சூழ்ச்சி தான் என தொடர்ந்து பேசிக்கொண்டு வருவதையும் நம்மால் பார்க்கமுடிகிறது. திருமாவளவன் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதை திமுக விரும்பவில்லை. அதனால் தான் இப்படி ஒரு சூழ்ச்சி செய்து அவரை தேர்தலில் போட்டியிடும் முடிவில் இருந்து பின்வாங்கிவிட்டார் என்கின்றனர் சிலர். ஆனால் நான் எந்த அழுத்தத்திற்கும் அடிபணியாத ஆள் என திட்டவட்டமாக கூறிவிட்டார் திருமாவளவன் என்பது குறிப்பிடத்தக்கது.