பெங்களூருவுக்கு எதிரான தோல்விக்கு பொறுப்பேற்றுக்கொள்கிறேன்; சென்னை கேப்டன் ருதுராஜ்

பெங்களூரு,

19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று பெங்களூருவில் நடந்த 11வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 250 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய சென்னை 19.4 ஓவரில் 207 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை 43 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.

இந்நிலையில், பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்தது குறித்து சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியதாவது,

இறுதியில் நாங்கள் 200 ரன்களை கடந்தது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. அதற்கான வெகுமதி, பாராட்டுகளை சர்பிராஸ் கான், ஓவர்டன், பிரசாந்த் வீருக்கு கொடுக்கிறேன். பேட்டிங்கில் நான் சிறப்பான பங்களிப்பை கொடுத்திருந்தால் ஆட்டத்தின் முடிவு மாறியிருக்கும்.

இந்த ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்விக்கு நான் பொறுப்பேற்றுக்கொள்கிறேன். டிம் டேவிட்டின் விக்கெட்டை வீழ்த்தினோம். ஆனால் அந்த பந்து நோ பாலாக மாறியது. அதன்பின்னர் டிம் டேவிட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பெங்களூருவின் 13வது, 14வது ஓவர் வரை ஆட்டம் எங்கள் கையில் இருந்தது. அதன்பின்னர், ஆட்டம் கைநழுவி விட்டது’ என்றார்.

Source link