சென்னையில் தவெக தலைவர் விஜய் இன்று மேற்கொள்ளவிருந்த பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் 2026
குறிப்பாக தமிழகத்தில் மூன்றாவது மாற்று சக்தியாக உருவெடுக்க தாவேக முயற்சி செய்து வருகிறது தொடர்ந்து வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காக கொண்டு விஜய் காய் நகர்த்தி வருகிறார் மேலும் இந்த தேர்தல் திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையே நடக்கும் போர் என்று தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கூறி வருகிறார். இந்த நிலையில் கடந்த மார்ச் 30ஆம் தேதி பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதி உள்ளிட்ட இரண்டு இடங்களில் விஜய் வேட்பாளராக களமிறங்க உள்ளார். இதற்காக வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது கொளத்தூர் மற்றும் பெரம்பூரில் பரப்புரை மேற்கொண்டார். அந்த சமயத்தில் அளவுக்கு அதிகமாக பொதுமக்கள் கூடியதால் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க தன்னுடைய பேச்சை குறைவான நேரத்தில் பேசி முடித்தார் இருப்பினும், விஜய் வந்து உரையாற்ற நேரத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டதாகவும், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.
விஜய்க்கு நெருக்கடி? தவெகவுக்கு சிக்கல்?
சென்னை பரப்புரை அனுமதி பிரச்சனை
குறிப்பாக விதிகளை மீறி விஜய் பிரச்சார மேற்கொண்டதாக அவர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பரப்புரைக்கு காவல் துறையினர் உரிய பாதுகாப்பு அளிக்காத காரணத்தினால் வில்லிவாக்கம் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டதாக தமிழக வெற்றிக் கழகம் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று சென்னை வில்லிவாக்கம் ,அண்ணா நகர் ,டி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விஜய் பரப்புரை மேற்கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என்று காவல்துறையினரிடம் கடிதம் அனுப்பப்பட்டது.
விஜய் எங்கு பிரச்சாரத்திற்குச் சென்றாலும், அங்கு சில எதிர்பாராத சம்பவங்கள் நடைபெறுகின்றன. பைக்கில் செல்பவர்கள் தடுமாறி விழுவது, பின்னால் துரத்தும் ரசிகர்கள் விபத்தில் சிக்குவது போன்ற நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. இதற்குப் பிறகும், கூட்ட நெரிசல் காரணமாக பெண்கள் மற்றும் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு, விஜய் பிரச்சாரம் நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடுகள் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளன.
பிரச்சாரத்தை ரத்து செய்த விஜய்
ஆனால் காவல்துறை தரப்பில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வில்லிவாக்கம் அண்ணா நகர் விருகம்பாக்கம் டி நகர் 4 உள்ளிட்ட தொகுதிகளில் பரப்புரை மேற்கொள்ள அனுமதி வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது குறிப்பாக வில்லிவாக்கம் தொகுதிக்குட்பட்ட சிட்கோ நகரில் மட்டும் பேசுவதற்கு காவல் துறையினர் ஒரு மணி நேரம் அனுமதி வழங்கினர்.
மேலும் திநகரில் விஜய் வருகையால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் என்றும் அந்தப் பகுதி சிறிய பகுதி என்பதால் கூட்ட நெரிசல் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது என்று கூறி அனுமதி வழங்க முடியாத நிலை இருப்பதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சென்னை தியாகராய நகர் முத்து ரங்கன் சாலை வில்லிவாக்கத்தில் விஜய் பரப்புரை செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், விஜய் கேட்ட நேரத்தில் காவல் துறை அனுமதி ஒழுக்கம் இருந்ததால் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டதாக தமிழக வெற்றிக்கழக கட்சியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
