ஜெய்சங்கருடன் ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி பேச்சுவார்த்தை

டெல்லி,

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக இணைந்து கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்பட பலர் உயிரிழந்தனர்.

இதையடுத்து, மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளம் உள்ள நாடுகள் மீதும், இஸ்ரேல் மீதும் ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, அரபிக்கடலில் ஹர்மூஸ் ஜலசந்தி பகுதியை ஈரான் மூடியுள்ளது.

இதனால் அரபு நாடுகளில் இருந்து கப்பல்கள் மூலம் உலகின் பிற நாடுகளுக்கு கச்சா எண்ணெய் கொண்டுசெல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருடன், ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி அப்பாஸ் ஆர்ச்சி நேற்று தொலைபேசியில் தொடர்புகொண்டு பேச்சுவார்த்தை நடத்தினார்.

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர், ஹர்மூஸ் ஜலசந்தியை திறக்கக்கோரி ஈரானுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கெடு விதித்தது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். அதேபோல், கத்தார் வெளியுறவுத்துறை மந்திரி ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் பின் ஜசிம் அல்தானியும் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை தொடர்புகொண்டு பேச்சுவார்த்தை நடத்தினார்.

Source link