ஜாபர் சாதிக்கிற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை

சென்னை,

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக முன்னாள் நிர்வாகியும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக், சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி, அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து, கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் 26-ம் தேதி கைது செய்தது. பின்னர் அவரது சகோதரர் முகமது சலீமும் ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் சென்னை ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், மணிஷ் சிஷோடியா தீர்ப்பை முன் உதராணமாக வைத்து ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் முகமது சலீமுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், போதைப் பொருள் வழக்கில் கைதாகி ஜாமீனிலுள்ள ஜாபர் சாதிக்கிற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் ஜாபர் சாதிக்கிற்கு சொந்தமான விடுதிகள், இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது. வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய பணம் பதுக்கப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் சோதனை நடக்கிறது. இருப்பினும் சோதனைக்கு பின்னரே முழுவிவரமும் தெரியவரும் என கூறப்படுகிறது.

Source link