10 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தமிழ்நாட்டில் வெயில் அதிகம் பதிவான மாவட்டங்கள்
- மதுரை விமான நிலையம் – 104 பாரன்ஹீட் (40 செல்சியஸ்)
- மதுரை நகரம் – 102.92 பாரன்ஹீட் (39.4 செல்சியஸ்)
- திருச்சி – 102.74 பாரன்ஹீட் (39.3 செல்சியஸ்)
- கரூர் பரமத்தி – 102.56 பாரன்ஹீட் (39.2 செல்சியஸ்)
- ஈரோடு – 101.84 பாரன்ஹீட் (38.8 செல்சியஸ்)
- திருத்தணி – 100.04 பாரன்ஹீட் (37.8 செல்சியஸ்)
இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர்.இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்தது. அந்த வகையில் இன்று 10 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திமுக கூட்டணியில் என்ன நடக்கிறது? ஏன் இப்படி பேசுகிறார்கள்?
சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு
நேற்று காலை 8.30 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் தேனி மாவட்டம் பனபுரம் பகுதியில் அதிகபட்சமாக 9 சென்டிமீட்டர் மழை பதிவாகிய உள்ளது. அதன் பிறகு, திருநெல்வேலி மாவட்டம் நாலு முக்கு, ஊத்துப்பகுதி உள்ளிட்ட இடங்களில் 7சென்டிமீட்டர் மழையும், வேலூர் மாவட்டம் பொன்னை அணை, காக்காச்சி, நீலகிரி மாவட்டம் பார்வர்ட் ,கடலூர் மாவட்டம் தொழுதூர், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தலா 5 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
மேலும் ராயலசீமா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மன்னார் வளைகுடா வரை தமிழகம் முழுவதும் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை சேர்ந்த பகுதிகளில் இன்று லேசானது அல்லது மிதமான மலைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
- அதன்படி
- அரியலூர்
- கடலூர்
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- திருவாரூர்
- திருச்சி
ஆகிய இடங்களில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், பொதுமக்கள் சற்று நிம்மதி பெரும் மூச்சு விட்டுள்ளனர். மேலும் தமிழகத்தின் வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் வெப்பநிலை இயல்பை விட மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாக வாய்ப்பு உள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் அதிகர் நீர் பருக வேண்டும், அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வெளியில் செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
