தேர்தல் நெருங்கும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இன்று சென்னை வருகின்றனர்.
அந்த வகையில், தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பே அதிமுக தலைமையில் மீண்டும் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாட்டில் இதுவரை பாஜக வலுப்படுத்தப்படவில்லை. எப்படியாவது தமிழ்நாட்டில் பாஜகவை வலுப்படுத்த வேண்டும் என்ற முயற்சியில் டெல்லி தலைமை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில் அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் 60 தொகுதிகள் வரை கேட்டதாக கூறப்படுகிறது. மேலும் அதிமுக பலம் வாய்ந்த தொகுதிகளை பாஜகவுக்கு தாரை பார்க்க முடியாது என்று கூறி எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்திருந்த நிலையில், இந்த முறை நடக்கும் தேர்தலில் பாஜக 27 தொகுதிகளில் களமிறங்கும் உள்ளது. ஒரு சில தொகுதிகளில் பாஜக அதிமுகவின் பலம் வாய்ந்த தொகுதியில் போட்டியிடுகிறது.
திமுகவை அசைத்து பார்க்கும் திருமாவின் முடிவு!
அதேபோல் அதிமுகவை ஒருபோதும் தமிழ்நாட்டில் காலூன்ற விடக்கூடாது என்ற முனைப்புடன் திமுக இதுவரை இல்லாத அளவிற்கு 20க்கும் மேற்பட்ட கட்சிகளுடன் 164 தொகுதிகளில் நேரடியாக களமிறங்க உள்ளது. இதனால் தமிழக அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இது ஒரு புறம் இருக்க மறுப்புரம் ஏப்ரல் 9ம் தேதி புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்காக என் ஆர் காங்கிரஸ் தலைமையில் பாஜக நீண்ட இழுபறிக்க பிறகு கூட்டணி அமைத்து தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவு செய்து வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.அந்த வகையில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுகாந்தி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மாலை 3.15 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடையும் அமித் ஷா, அங்கிருந்து ஹெலிகாப்டரில் புதுச்சேரிக்கு சென்று பரப்புரை மேற்கொள்கிறார். மாலை 6.10 மணிக்கு மீண்டும் சென்னை திரும்பும் அவர், விமான நிலையத்தில் மாநில பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. பின், அங்கிருந்து அவர் டெல்லிக்கு விமானத்தில் புறப்பட்டு செல்கிறார்.
இதற்கிடையே, காலை 10 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை விமான நிலையத்துக்கு வந்தடையும் ராகுல் காந்தி, அங்கு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். பின், 12 பேர் மட்டுமே பயணிக்கக்கூடிய சிறிய ரக விமானத்தில், அவர் புதுச்சேரிக்கு செல்ல உள்ளார். அதன்பின், சென்னைக்கு அவர் வருவது தொடர்பாக எதுவும் திட்டமிடப்படவில்லை என கூறப்படுகிறது. இரு துருவத் தலைவர்களும் ஒரே நாளில் தமிழகம் வருவதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இவர்களின் வருகையையொட்டி சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
