போதைப் பொருள் வழக்கில் கைதாகி பிணையில் உள்ள ஜாபர் சாதிக்-திற்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி உள்ளனர். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
போதைப்பொருள் வழக்கில் சிக்கிய ஜாபர் சாதிக்
தமிழகத்தில் இதுவரை உரிய ஆவணம் என்று சுமார் 273 கோடிரூபாய் பணம் மற்றும் பரிசு பொருட்களை தேர்தல் கண்காணிப்பு குழு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். குறிப்பாக இதில் பணம் ரொக்கமாகவும், போதைப் பொருள்கள் விலை மதிப்புள்ள உலோகங்கள் அதாவது தங்கம், வெள்ளி உள்ளிட்டவை மற்றும் இதர இலவச பொருள்கள் அனைத்தும் பெறப்பட்டது. இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலுக்காக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பண பட்டுவாடா செய்யப்படுவதாக தகவல்கள் வெளியானது. இந்த தகவலை தொடர்ந்து சென்னையில் மட்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் 10க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் ஆய்வு செய்தனர்.
திமுக கூட்டணியில் என்ன நடக்கிறது? ஏன் இப்படி பேசுகிறார்கள்?
- ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் IT ‘ரெய்டு
- போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் சோதனை ஈடுபட்ட அதே இடங்களில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.
- சென்னை எழும்பூர் கீழ்பாக்கம் உள்ளிட்ட ஐந்து இடங்களை ஜாபர் சாதிக் தொடர்புடைய கட்டிடங்களை வருமான வரித்துறை என சோதனை.
- எழும்பூரில் உள்ள ஜே எஸ் எம் அடுக்குமாடி குடியிருப்பில் வருமானவரித்துறை சோதனை.
- சர்வதேச போதை பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய ஜாபர் சாதிக்.
- நிதி ஆதாரங்கள் தேர்தல் பணப்பட்டுவாடா தொடர்புகளை கண்டறிய சோதனை
10 இடங்களில் வருமானவரி சோதனை
குறிப்பாக போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய திமுக ஆதரவாளரும், திரைப்பட தயாரிப்பாளரான ஜாபர் சாதிக் சொந்தமான இடங்களிலும் , அவரது ஆதரவாளர்களுக்கு சொந்தமான இடங்களிலும் இன்று அதிகாலையில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக எழும்பூர் பகுதியில் உள்ள ஜே.எஸ். எம் விடுதி அண்ணா சாலையில் அமைந்துள்ள விடுதி மற்றும் எத்திராஜ் கல்லூரிக்கு அருகில் உள்ள ஜே .எஸ் .எம் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனையை நடத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து பட்டினப்பாக்கத்தில் உள்ள ஜாபர் சாதிக் இல்லத்திலும் அதிகாரிகள் சோதனை நடத்தியதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றியதாக தகவல் வெளியாகி உள்ளது.
முக்கிய ஆவணங்கள் சிக்கியதா?
கடந்த 2024 ஆம் ஆண்டு திமுக ஆதரவாளரான ஜாபர் சாதிக் போதை பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டது ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அமலாக்க துறை அதிகாரிகளும் ஜாபர் சாதிக்க கைது செய்து விசாரணை நடத்தி வரும் சூழலில், தற்போது வருமானவரித்துறையினரின் புதிய சோதனை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
தேர்தல் நடைபெற இன்னும் 16 நாட்களே உள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பண விநியோகம் செய்வதாக தேர்தல் படிக்கும் படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பெயரில், துறை அதிகாரிகளுடன் இந்த சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் முழுமையான விசாரணை முடிந்த பிறகு ஜாபர் சாதிக்-யிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து விபரத்தை வருமான வரித்துறை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
