அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிச்சாமி இன்றைய தினம் எடப்பாடி தொகுதியில் வேட்பு மனுவை தாக்கல் செய்திருக்கிறார்.
தமிழகத்தின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கக்கூடிய கட்சியினர் இன்றைய தினமே தங்களின் வேட்பு மனுவை தாக்கல் செய்து வருகின்றனர். அந்த வகையில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான இபிஎஸ் எடப்பாடி தொகுதியில் எட்டாவது முறையாக களம் காண்கிறார். அதற்கான வேட்புமனுவை கடைசி நாளான இன்று தாக்கல் செய்துள்ளார். 1989 – ஆம் ஆண்டிலிருந்தே எடப்பாடி தொகுதியில் பழனிச்சாமி போட்டியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
