விஜய் அறியாமையில் பேசுறாரு.. எப்பவுமே திமுக Vs அதிமுக தான்.. இபிஎஸ் பேட்டி..! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 30-ம் தேதி தொடங்கியது.. இதுவரை 3,414 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாளாகும்.. இன்றைய தினம் பல்வேறு முக்கிய தலைவர்கள் தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.. அந்த வகையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, இன்று எடப்பாடி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார்.. எடப்பாடி தொகுதியில் 8வது முறையாக போட்டியிடும் அவர் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்..

இதை தொடர்ந்து இபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது “ தமிழகம் முழுவதும் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.. சட்டமன்ற தேர்தலில் 210 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும்.. திமுக ஆட்சியில் முடக்கப்பட்ட அதிமுகவின் அனைத்து திட்டங்களும் மீண்டும் ஆட்சிக்கு வந்த உடன் நிறைவேற்றப்படும்.” என்று தெரிவித்தார்..

அப்போது திமுக – தவெக இடையே தான் போட்டி என்று விஜய் கூறுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.. அதற்கு பதிலளித்த இபிஎஸ் “ அதிமுக பிரதான எதிர்க்கட்சி.. அதிமுக என்பது 31 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த கட்சி.. பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து நடைமுறைப்படுத்தி மக்களிடம் வரவேற்பை பெற்ற கட்சி.. மீண்டும் அதிமுக கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்று மக்கள் முடிவு செய்துவிட்டனர்.. திமுக – தவெக இடையே தான் போட்டி என  விஜய் சொல்வது விஜய்யின் அறியாமையின் வெளிப்பாடு.” என்று தெரிவித்தார்..

Read More : “விசில் ஊதினால் சளி போயிடும்.. இதயம் நல்லா வேலை செய்யும்..” செங்கோட்டையன் நூதனப் பிரச்சாரம்..!

Source link