கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.
அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.
இந்த சூழலில் இன்று காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 குறைந்து ரூ.1,10,480க்கும் விற்பனையானது..
இந்த நிலையில் இன்று பிற்பகல் சென்னையில் ஆபரண தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.. அதன்படி இன்று பிற்பகல் தங்கம் விலை கிராமுக்கு ரூ.180 உயர்ந்து ரூ.13,990க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.1,440க்கு உயர்ந்து ரூ.1,11,920க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இன்று காலை மாற்றமின்றி தொடர்ந்த வெள்ளி விலை, பிற்பகலில் உயர்ந்துள்ளது.. அதன்படி இன்று பிற்பகல் ஒரு கிராம் வெள்ளி ரூ.5 உயர்ந்து ரூ.260க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.5000 உயர்ந்து ரூ.2.60 லட்சத்திற்கு விற்பனையாகிறது..
Read More : மீண்டும் ட்விஸ்ட்.. கடைசி நேரத்தில் எல்லாத்தையும் மாற்றிய விஜய்..! வேட்பு மனுவில் 3-வது முறையாக திருத்தம்..!
