பெரும் பரபரப்பு..! டெல்லி சட்டமன்ற வளாகத்தில் அத்துமீறி நுழைந்த கார்.. பூங்கொத்தை வைத்துவிட்டு தப்பியோடிய மர்ம நபர்..! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

உத்தரப்பிரதேசப் பதிவு எண் கொண்ட ஒரு கார் டெல்லி சட்டமன்ற வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்ததால் பரபரப்பு நிலவியது.. இதை தொடர்ந்து, அங்கு ஒரு பெரும் பாதுகாப்பு மீறல் நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அந்தக் கார் சட்டமன்றத்தின் 2-ஆம் எண் வாயிலில் அமைக்கப்பட்டிருந்த இரும்புத் தடுப்பை உடைத்துக்கொண்டு, சட்டமன்ற வளாகத்திற்குள் நுழைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன..

அதன்பின், அந்த கார் ஓட்டுநர் சபாநாயகர் விஜேந்தர் குப்தாவின் அலுவலகத்தை நோக்கிச் சென்று, அலுவலக முகப்புப் பகுதியில் ஒரு பூங்கொத்தை வைத்துவிட்டுச் சென்றார்.

அடையாளம் தெரியாத அந்தக் கார் பின்னர் சட்டமன்ற வளாகத்திலிருந்து தப்பிச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.. இச்சம்பவம் அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துப் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்த சம்பவம் ஒரு தீவிரமான பாதுகாப்பு மீறலாகக் கருதப்படுகிறது.. அந்த காரை ஓட்டி வந்த நபர் யார் என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. மேலும் இந்த செயலுக்குப் பின்னணியில் உள்ள நோக்கத்தைக் கண்டறியவும் ஒரு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

Read More : வாகன ஓட்டிகள் கவனத்திற்கு..! ஏப்ரல் 10 முதல் சுங்கச்சாவடிகளில் இது நிறுத்தப்படும்..!

Source link