அமெரிக்காவுக்கு எதிரான வெற்றி….சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன ?

மும்பை,

இந்தியா மற்றும் இலங்கை இணைந்து 10-வது ஐ.சி.சி. ஆடவர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டித்தொடரை நடத்துகிறது. 20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் தலா 5 அணிகள் என 4 பிரிவுகளாக (ஏ,பி,சி,டி) பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இதில் நேற்று நடைபெற்ற 3வது ஆட்டத்தில் இந்தியா மற்றும் அமெரிக்க அணி விளையாடின.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற அமெரிக்கா அணியின் கேப்டன் மோனங்க் படேல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா , இஷான் கிஷான் களமிறங்கினர். தொடக்கத்தில் அபிஷேக் சர்மா டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். பின்னர் அமெரிக்கா அணியின் சிறப்பான பந்த்துவீச்சால் இஷான் கிஷான் 20 ரன்களும், திலக் வர்மா 25 ரன்களும் , ஷிவம் துபே டக் அவுட் ஆனார்.

பின்னர் ரிங்கு சிங் , ஹர்திக் பாண்டியா 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அக்சர் படேல் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் . மறுபுறம் சூர்யகுமார் யாதவ் நிலைத்து ஆடி ரன்கள் குவித்தார். பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்ட அவர் அரைசதமடித்து அசத்தினார்.இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது. சூர்யகுமார் யாதவ் 84 ரன்கள் எடுத்தார். அமெரிக்கா அணியில் ஷாட்லி வான் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

அடுத்து களமிறங்கிய அமெரிக்க அணி 20 ஓவரில் 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 29 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் சிராஜ் 3 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்த நிலையில், வெற்றி தொடர்பாக பேசிய இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியதாவது,

நாங்கள் 6 விக்கெட்டுக்கு 77 ரன்கள் எடுத்திருந்த நிலையில், எனக்கு எவ்வளவு அழுத்தம் இருந்தது என்பதை என்னால் மட்டுமே சொல்ல முடியும். ஆனால் அதே நேரத்தில், இதே போன்ற சூழ்நிலைகளில் நான் பேட்டிங் செய்திருக்கிறேன் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. நான் இறுதி வரை பேட்டிங் செய்தால், ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று எனக்குத் தெரியும். வான்கடேயில் எப்போதும் இருப்பதை விட இது சற்று வித்தியாசமான விக்கெட். நாங்கள் இன்னும் கொஞ்சம் சிறப்பாக பேட்டிங் செய்திருக்கலாம். நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன். இன்று நாங்கள் புத்திசாலித்தனமாக எப்படி பேட்டிங் செய்யலாம் என்பதைக் கற்றுக்கொண்டோம். என தெரிவித்தார்.

Source link