அதுமட்டுமல்லாமல் தவெக தலைவர் விஜய் கூட தனி நபர்களை தாக்கி தான் பரப்புரை செய்து வருகின்றார் என்றும் சரத்குமார் கூறியிருக்கின்றார். மேலும் விஜய் அதிமுக கூட்டணிகள் வாக்குகளை தான் பிரிப்பார் என ஒருபக்கம் சொல்லப்படுகின்றது. இதுகுறித்து சரத்குமார் தன் கருத்தினை முன் வைத்துள்ளார். யாருடைய வாக்குகளை யார் பிரிப்பார் என்பது குறித்து கணிக்கமுடியாது.
ஆனால் விஜய் கட்சியினர் பெரும் வாக்குகள் மற்ற கட்சியினரின் வெற்றிதோல்விகளை பாதிக்கலாம். ஒருவர் தனது வெற்றிவாய்ப்பினை இழக்க நேரிடும் வாய்ப்பும் உள்ளது. எனவே மக்கள் தெளிவாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும். மக்கள் சரியாக சிந்தித்து தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்குகளை செலுத்த வேண்டும் என்பது தான் என்னுடைய கருத்து என்றார் சரத்குமார்.
மேலும் பலர் திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்துள்ளனர், கட்சி துவங்கியிருக்கின்றனர். ஆனால் மற்ற கட்சியிலிருந்து உங்களுடைய கட்சியின் கொள்கை வித்யாசப்படுகின்றதா ? என்பது தான் கேள்வி. முதலில் இலவசங்களை எதிர்ப்பேன் என விஜய் கூறினார். ஆனால் அவருடைய தேர்தல் வாக்குறுதிகளில் அவரே இலவசங்களை அறிவித்து இருக்கின்றார். புது திட்டங்கள் எதையும் அவர் அறிவிக்கவில்லை.
தனி நபர்களை தாக்கி தான் விஜய்பரப்புரை செய்கின்றார். அவருடன் இருப்பவர்களும் அதைப்போல தான் பேசுகின்றனர். தவெகவினரின் பேச்சில் ஆணவம் தெரிகின்றது. கொள்கை கோட்பாடோடு பேச வேண்டும், அடுத்தவர்களை தாக்கி மட்டுமே பேசக்கூடாது என்றார் சரத்குமார். மேலும் எந்த ஒரு வேலையாக இருந்தாலும் அந்த வேலைக்கு அவர்கள் சரிப்பட்டு வருவார்களா ? என சோதித்து பார்த்து தான் வேலை கொடுக்க முடியும். ஆனால் விஜய்யை சோதித்து பார்காமலையே அவர் ஆட்சியை பிடிப்பார் என சொல்வதில் எந்த நியாயமும் இல்லை என பேசினார் சரத்குமார்.
இவ்வாறு அடுத்தடுத்து தவெக தலைவர் விஜய்யை பாஜக நிர்வாகி சரத்குமார் விமர்சனம் செய்து வருகின்றார். பாஜக நிர்வாகியுமான சரத்குமார் மட்டுமல்லாது தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவரான செல்வப்பெருந்தகை கூட இதே கருத்தை தான் கூறினார். அடுத்தவர்களை தாக்கி மட்டுமே பேசக்கூடாது. மக்களுக்காக உழைப்பவர்களை குறை கூறுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என விஜய்க்கு அட்வைஸ் செய்தார் செல்வப்பெருந்தகை.
இவ்வாறு பிற காட்சிகளை சேர்ந்தவர்கள் தொடர்ந்து விஜய்யை அடுத்தவர்களை தாக்கி மட்டும் பேசக்கூடாது என சொல்வதால் அவர் அதனை குறைத்துக்கொள்வாரா ? என்பது தான் கேள்வியாக உள்ளது. தன் கட்சியின் கொள்கையின் அடிப்படையில் மக்களுக்கு இதையெல்லாம் செய்வேன் என சொல்லி வாக்கு சேகரித்தால் சிறப்பாக இருக்கும் என்பது தான் பொது மக்களின் கருத்தாக உள்ளது.
அடுத்தவர்கள் செய்த குறையை சுட்டிக்காட்டுவதை விட மக்கள் அதை தான் விரும்புவார்கள். என்னதான் விஜய் தான் ஆட்சி வந்தால் என்னென்ன மாற்றங்களை கொண்டு வருவேன் என பேசினாலும் அவர் திமுக மற்றும் அதிமுக கட்சிகளை கடுமையாக விமர்சிப்பது தான் மக்களின் மனதில் அழுத்தமாக பதிவதாக பலர் சொல்கின்றனர்.
விஜய் கட்சியில் செங்கோட்டையன்! அதிமுக வாக்குகள் எப்படி பாதிக்கும்- மக்கள் கருத்து இதுதான்
எனவே அதனை குறைத்துக்கொண்டு தனது கட்சியின் கொள்கையை அடித்தளமாக வைத்து மக்களுக்காக செய்யப்போகும் திட்டங்கள் குறித்து விஜய் இன்னும் அழுத்தமாக பேசினால் அது அவருக்கும் அவரது கட்சியினருக்கும் மேலும் வலு சேர்க்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
