Edappadi Palanisamy Networth,எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் முழு சொத்து மதிப்பு விவரங்கள் – edappadi palanisamy affidavits released for 2026 elections

இன்றுடன் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிவடைகின்றது. இந்த சமயத்தில் எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிச்சாமி வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் அவரின் சொத்து மதிப்பு குறித்தான விவரங்கள் கிடைத்துள்ளது. அந்த வகையில் எடப்பாடி பழனிசாமிக்கு ஐம்பது ருபாய் மதிப்பிலான அசையும் சொத்து இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயம் அசையா சொத்து எதுவுமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எடப்பாடி பழனிச்சாமியின் மனைவி ராதா பெயரில் அசையா சொத்து 3 .45 கோடி இருப்பதாகவும் 2 .16 கோடியில் அசையும் சொத்து இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் எடப்பாடி பழனிச்சாமியின் பெயரில் விவசாய நிலம் எதுவுமில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அவரது மனைவியின் பெயரில் ஆறு இடங்கள் இருக்கின்றதாம். அதோடு மட்டுமல்லாமல் ஒரு பண்ணை வீடும் மனைவியின் பெயரில் இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கின்றார்.

இந்நிலையில்எடப்பாடி பழனிச்சாமி நடப்பாண்டு சம்பள வருவாய் 10 லட்சம் எனவும் வட்டி வருவாய் ஒரு லட்சம் எனவும் குறிப்பிட்டுள்ளார். அதே போல அவரது மனைவி ராதா அவர்களின் எட்டு லட்சம் ரூபாயையும் வட்டி வருவாயாக ஒரு லட்சம் ரூபாயையும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது கையில் ரொக்கமாக எடப்பாடி பழனிசாமியிடம் ஐம்பதாயிரம் ருபாய் உள்ளதாகவும், அவரது மனைவி ராதாவிடம் ஒரு லட்சம் ரொக்கமாக கையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

நகைகளை பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமியிடம் தங்க நகைகளாக நூறு கிராம் இருக்கின்றதாம். அதன் மதிப்பு 11 ,25 ,000 ரூபாயம். அவரது மனைவியிடம் 720 கிராம் தங்க நகைகள் உள்ளதாம். அதன் மதிப்பு 81 ,00 ,000 ருபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக எடப்பாடி பழனிச்சாமியின் சொத்துக்களின் மதிப்பு வங்கி கணக்கில் இருக்கும் பணம் உட்பட 50 ,86 ,546 ரூபாயையும் அவரது மனைவி ராதாவிடம் 2 ,16 ,15 ,927 ரூபாயையும் இருக்கிறதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எடப்பாடி பழனிசாமியிடம் வாகனங்கள் எதுவுமில்லை எனவும் சொத்து விவரத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கின்றது.

குறிப்பாக எடப்பாடி பழனிசாமியிடம் வேளாண்மை நிலங்கள் எதுவுமில்லையாம். ஆனால் அவரது மனைவியின் பெயரில் வேளாண்மை நிலங்கள் 4200 சதுர அடி இருக்கின்றதாம். மேலும் எடப்பாடி பழனிசாமிக்கு பூர்விக சொத்து எதுவுமில்லை என சொத்து விவரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு ரூபாய் 17 ,00 ,000 க்கு கடன் இருக்கின்றதாம். இது தனி நபருக்கு செலுத்த வேண்டிய கடனே தவிர வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடன் இல்லை என குறிப்பிடப்பட்டு இருக்கின்றது இதனைத்தொடர்ந்து வாடகை ,குடிநீர் கட்டணங்கள் மற்றும் மின் கட்டணங்கள் என எதுவுமே நிலுவையில் இல்லையாம். இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமியின் சொத்து விவரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் 2026 ஆம் ஆண்டிற்கான சொத்து விவரங்கள் வெளியான நிலையில் 2021 ஆம் ஆண்டு அவரின் சொத்து மதிப்பு எவ்வளவு இருந்தது ? தற்போது அந்த சொத்து மதிப்பு எவ்வளவு இருப்பு இருக்கின்றது ? என சிலர் ஒப்பிட்டு பார்த்து வருவதும் குறிப்பிடத்தக்கது

Source link