காட்பாடி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் துரைமுருகன் என்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். தற்பொழுது அவரின் சொத்து மதிப்பு வெளியாகி உள்ளது.
துரைமுருகன் வேட்புமனுத்தாக்கல்
இதுவரை அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்றுடன் கடைசி நாள் என்பதால் வேட்பாளர்கள் ஒட்டுமொத்தமாக அந்தந்த பகுதிகளில் வேப்பமனுக்களை தாக்கல் செய்தனர் அந்த வகையில் திமுக சார்பில் காட்பாடி தொகுதியில் போட்டியிடும் துரைமுருகன் என்று வேட்பு மனு தாக்கல் செய்தார் தற்பொழுது பிரமாண பத்திரத்தில் அவரின் சொத்து மதிப்பு குறிப்பிடப்பட்டுள்ளது, அது குறித்து தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது இதுகுறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
துரைமுருகனிடம் மொத்த சொத்து மதிப்பு 11.55 கோடி ரூபாய்
திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் என்று வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். தொடர்ந்து 11 வது முறையாக காட்பாடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட உள்ளார். வேட்பு மனுவில் அவரது சொத்து விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி துரைமுருகனிடம் மொத்தமாக 11.55 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன .
மனைவி சாந்தகுமாரி பெயரில் 59 கோடி மதிப்பு சொத்து
இதில் அசையும் சொத்துக்கள் ரூபாய் 4.1 கோடியும் அசையா சொத்துக்கள் மதிப்பு ரூபாய் 7.43 கோடியும் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் அவரது மனைவி சாந்தகுமாரி பெயரில் 59 கோடி மதிப்புள்ளான சொத்துக்கள் இருப்பதாக வேட்புமனவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அமைச்சர் துரைமுருகன் மீது லஞ்ச ஒழிப்பு வழக்கு உள்ளிட்ட மொத்தம் ஒன்பது வழக்குகள் நிலுவையில் உள்ளதாக வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரை கிலோ தங்கம், 2 கிலோ வெள்ளி
அதோடு அவரிடம் அரை கிலோ தங்கம், 2 கிலோ வெள்ளி மற்றும் ஒரு காரட் வைரம் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலுடன் ஒப்பிடுகையில் தற்பொழுது அவரின் சொத்து மதிப்பு உயர்ந்து உள்ளது.கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் பொழுது அமைச்சர் துரைமுருகன் தாக்கல் செய்த வேட்பு மனுவில் மொத்த சொத்து மதிப்பு 9.59 கோடி இருப்பதாக தெரிவித்திருந்த அப்போது அசையும் சொத்துக்கள் 2.30 கோடியும் அசையா சொத்துக்கள் 7.28 கோடியும் உள்ளதாக கூறி இருந்தார்.
துரைமுகருகன் சொத்து மதிப்பு உயர்வு
மேலும் அவரது மனைவி பெயரில் 20.2 கோடி மதிப்புள்ள ஆன சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.தற்பொழுது தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்பு மனுவில் கடந்த சில ஆண்டுகளில் அவரது மற்றும் மனைவி உள்ளிட்டு குடும்பத்தாரின் சொத்து மதிப்பு குறிப்பிட்ட தக்க அளவில் உயர்ந்துள்ளது இந்த வேட்புமனுவில் தெளிவாக காட்டுகிறது.
