இருந்தாலும் எதிர்க்கட்சிகள் இது தொடர்பாக தொடர்ந்து பேசி வருகின்றனர். தற்போது முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இதைப்பற்றி பேசியிருக்கிறார். திருமாவளவனை திமுக மிரட்டியிருக்கின்றனர். கனிமொழிக்கும் அவர்கள் சீட் வழங்கவில்லை. இதெல்லாம் உதயநிதிக்காக தான் செய்கின்றார்கள். எங்கே உதயநிதி ஸ்டாலினுக்கு போட்டியாக வந்துவிடுவார்களோ ? என்பதால் தான் திமுகவினர் கனிமொழிக்கு சீட் கொடுக்கவில்லை.
அதைப்போல திருமாவளவனையும் மிரட்டி தேர்தலில் இருந்து பின்வாங்க வைத்திருக்கின்றனர் என குற்றம்சாட்டினார் அண்ணாமலை. கனிமொழி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற தன் விருப்பத்தை தெரிவித்தார். எம்.பி பதவி வேண்டாம் சட்டமன்ற இருப்பினராக விருப்பப்பட்டு சீட் கேட்டுள்ளார் கனிமொழி. ஆனால் அவருக்கு திமுக சீட் வழங்கவில்லை.
ஏனென்றால் கனிமொழி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டால் உதயநிதிக்கு பொடியாக வந்துவிடுவாரோ என்பதால் தான் முக ஸ்டாலின் இப்படி செய்திருக்கின்றார். அதைப்போல திருமாவளவனும் மிரட்டப்பட்டுள்ளார். திருமாவளவனின் நிலை பரிதாபமாக உள்ளது. இதற்கு முன்பு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார் திருமாவளவன். தமிழகத்தில் அரசியல் களம் மாறுகின்றது என உணர்ந்தார் திருமாவளவன்.
திமுக மெஜாரிட்டிக்கு வராது என தெரிந்த திருமாவளவன்சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு அமைச்சர் அல்லது துணை முதல்வர் பதவியை பெறலாம் என எண்ணியிருப்பார். ஆனால் திமுக இதற்கு தடைபோட்டனர். நாம் ஆட்சிக்கு வரமாட்டோம் என மக்களுக்கு தெரியும், எனவே வேட்புமனுவை வாபஸ் வாங்குங்கள் என சொல்லி அவரை வாபஸ் வாங்க வைத்திருக்கின்றனர்.
இது திருமாவளவனுக்கு நடந்த அநியாயமாக தான் பார்க்கப்படுகின்றது என்றார் அண்ணாமலை. இவ்வாறு திருமாவளவன் தேர்தலில் இருந்து பின்வாங்கியது தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து திமுகவை விமர்சனம் செய்து வருகின்றனர். ஏற்கனவே திருமாவளவனின் விசிக கட்சிக்கு குறைவான தொகுதிகளை தான் திமுக ஒதுக்கியிருப்பதாக விமர்சனங்கள் எழுந்தது.
திருமாவளவனை ஏமாற்றுகின்றனர் என திமுகவிற்கு எதிரான காட்சிகள் குரல் எழுப்பினார்கள். இந்த நிலையில் அவர் தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்தது மேலும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. இதையெல்லாம் உதயநிதி ஸ்டாலினுக்காக தான் திமுக செய்கிறார்களா ? என எதிர்க்கட்சியினர் கேள்வி கேட்டு வருகின்றனர். கனிமொழி மற்றும் திருமாவளவன் என இருவரும் அனுபவமிக்க அரசியல்வாதிகள்.
எனவே அவர்கள் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றால் கண்டிப்பாக உதயநிதி ஸ்டாலினின் துணை முதல்வர் பதவிக்கு போட்டியாக இருப்பார்கள். எனவே அதனை தடுக்க தான் திமுக இவர்கள் இருவரையும் தேர்தலில் போட்டியிடவிடவில்லை என எதிர்க்கட்சியினர் தங்களின் வாதத்தை முன் வைக்கின்றனர்.
ஆனால் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்பது என் முடிவு தான் என திருமாவளவன் திட்டவட்டமாக கூறியிருக்கின்றார். ஒருவேளை திருமாவளவன் போன்ற அரசியல் கட்சி தலைவருக்கு அழுத்தம் கொடுத்திருந்தால் அவர் கண்டிப்பாக கூட்டணியை விட்டு வெளியேறியிருப்பார். ஜனநாயகத்திற்கு எதிரான எந்த ஒரு செயலையும் திருமாவளவன் ஆதரிக்கமாட்டார்.
நயினாருக்கு வச்ச செக்… டிடிவி தினகரனை இயக்குகிறாரா அண்ணாமலை?
எனவே இது அவரின் சொந்த முடிவாக தான் இருக்கும் என்கின்றனர் திமுக ஆதரவாளர்கள். இந்நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்து வரும் நிலையில் திருமாவளவனின் இந்த முடிவு பரபரப்பான பேசும்பொருளாக உருவெடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
