தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 களம் விறுவிறுபான நிலையில் 27 வி.ஐ.பி தொகுதிகளில் நிலவும் அனல் பறக்கும் போட்டி நிலவி வருகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: நட்சத்திரத் தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல்
- கொளத்தூர்: திமுக சார்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து சந்தானகிருஷ்ணன் (அதிமுக), வி.எஸ். பாபு (தவெக) மற்றும் சவுந்திரபாண்டியன் லூடர் சேத் (நாதக) ஆகியோர் களம் காண்கின்றனர்.
- எடப்பாடி: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி களம் காணும் இத்தொகுதியில், திமுக சார்பில் காசி, தவெக சார்பில் அருண்குமார் மற்றும் நாதக சார்பில் பிரியதர்சினி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
விஜய்
- பெரம்பூர்: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் ஜோசப் விஜய் இத்தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து ஆர்.டி. சேகர் (திமுக), திலகபாமா (பாமக) மற்றும் வெற்றித்தமிழன் (நாதக) ஆகியோர் மோதுகின்றனர்.
- திருச்சி கிழக்கு: தவெக தலைவர் ஜோசப் விஜய் போட்டியிடும் மற்றொரு தொகுதி இதுவாகும். இங்கு திமுகவின் இனிகோ இருதயராஜ் மற்றும் அதிமுகவின் க. ராஜசேகரன் ஆகியோர் முக்கிய எதிரிகளாக உள்ளனர்.
- காரைக்குடி: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் களம் காண்கிறார். இவரை எதிர்த்து எஸ். மாங்குடி (காங்கிரஸ்) மற்றும் பிரபு (தவெக) போட்டியிடுகின்றனர்.
உதயநிதி ஸ்டாலின்
- சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திமுக சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து ஆதிராஜாராம் (அதிமுக) மற்றும் டி. செல்வம் (தவெக) களம் காண்கின்றனர்.
- போடிநாயக்கனூர்: முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் திமுக சார்பில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து வி.டி. நாராயணசாமி (அதிமுக) மற்றும் பிரகாஷ் (தவெக) ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
- சாத்தூர்: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் களம் காண்கிறார். இவரை எதிர்த்து அ. கடற்கரை ராஜ் (திமுக) மற்றும் அஜித் (தவெக) மோதுகின்றனர்.
தமிழிசை சவுந்தரராஜன்
- ஸ்ரீபெரும்புதூர்: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து கே. பழனி (அதிமுக) மற்றும் தென்னரசு (தவெக) களம் காண்கின்றனர்.
- அவினாசி: மத்திய இணை அமைச்சர் எல். முருகன் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து டாக்டர் கோகிலா மணி (திமுக) மற்றும் கமலி (தவெக) போட்டியிடுகின்றனர்.
- மயிலாப்பூர்: முன்னாள் ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பாஜக சார்பில் களம் காண்கிறார். இவரை எதிர்த்து தா. வேலு (திமுக) மற்றும் வெங்கட்ரமணன் (தவெக) மோதுகின்றனர்.
பிரேமலதா விஜயகாந்த்
- விருத்தாசலம்: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் களம் காண்கிறார். இவரை எதிர்த்து டாக்டர் தமிழரசி ஆதிமூலம் (பாமக) மற்றும் விஜய் (தவெக) போட்டியிடுகின்றனர்.
- தர்மபுரி: பாமக சார்பில் சவுமியா அன்புமணி போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து வி. இளங்கோவன் (தேமுதிக) மற்றும் சிவன் (தவெக) களம் காண்கின்றனர்.
- காட்பாடி: திமுகவின் மூத்த தலைவர் துரைமுருகன் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து வி. ராமு (அதிமுக) மற்றும் சுதாகர் (தவெக) மோதுகின்றனர்.
வானதி சீனிவாசன்
- கோவை வடக்கு: பாஜகவின் வானதி சீனிவாசன் களம் காண்கிறார். இவரை எதிர்த்து செந்தமிழ்செல்வன் (திமுக) மற்றும் சம்பத்குமார் (தவெக) போட்டியிடுகின்றனர்.
- தியாகராய நகர்: தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து ராஜா அன்பழகன் (திமுக) மற்றும் தி.நகர் சத்தியா (அதிமுக) மோதுகின்றனர்.
- வில்லிவாக்கம்: தவெக பரப்புரை செயலாளர் ஆதவ் அர்ஜூனா களம் காண்கிறார். இவரை எதிர்த்து கார்த்திக் மோகன் (திமுக) மற்றும் விஜயகுமார் (அதிமுக) போட்டியிடுகின்றனர்.
தமிமுன் அன்சாரி
- திரு.வி.க நகர்: மறைந்த ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து கே.எஸ். ரவிச்சந்திரன் (திமுக) களம் காண்கிறார்.
- திருச்செங்கோடு: கொமதேக பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் போட்டியிடுகிறார்.
- நாகப்பட்டினம்: மநேமக தலைவர் ஜவாஹிருல்லா திமுக கூட்டணியில் களம் காண்கிறார்.
- சிதம்பரம்: மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி போட்டியிடுகிறார்.
- சிவகங்கை: முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் களம் காண்கிறார்.
ஜிகே மணி
- பென்னாகரம்: ஜி.கே. மணியின் மகன் ஜி.கே.எம். தமிழ்குமரன் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்.
- மதுரை மத்தி: நடிகர் சுந்தர் சி புதிய நீதிக்கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் (திமுக) களம் காண்கிறார்.
- ராஜபாளையம்: ஜான் பாண்டியனின் மனைவி பிரிசில்லா பாண்டியன் தமமுக சார்பில் போட்டியிடுகிறார்.
- விருதுநகர்: விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகர் தேமுதிக சார்பில் போட்டியிடுகிறார்.
- ராதாபுரம்: சபாநாயகர் மு. அப்பாவு திமுக சார்பில் மீண்டும் களம் காண்கிறார். இவரை எதிர்த்து எஸ்.பி. பாலகிருஷ்ணன் (பாஜக) போட்டியிடுகிறார்.
