தமிழ்நாட்டில் மொத்தம் 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.. மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது..தேர்தல் தேதி நெருங்கும் நிலையில் அரசியல் களம் நாளுக்கு நாள் அனல் பறந்து வருகிறது..
2026 தேர்தலில் தேமுதிக திமுக கூட்டணியில் முதன்முறையாக இணைந்துள்ளது.. தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிடுகிறார்.. விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் விருதுநகர் தொகுதியில் களம் காண்கிறார்..
இந்த நிலையில் விஜய பிரபாகரன் விஜய் சுயநலவாதி என்று சாடி உள்ளார்.. பிரபல ஆங்கில ஊடகத்திற்கு பேட்டியளித்த அவர் “ விஜய்காந்தால் தான் விஜய் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.. அதில் எந்த சந்தேகமும் இல்லை.. ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் அது தெரியும்.. ஆனால் அரசியலில் நுழைந்த பின்னர் ஒவ்வொருக்கும் கொஞ்சம் சுயநலம் இருக்கும்.. விஜயகாந்தை பொறுத்தவரை அவர் ஒரு நடுநிலையான தலைவர்.. அவரை எல்லோருக்கும் பிடிக்கும்.. விஜய் அண்ணாவுக்கும் கேப்டனை பிடிக்கும் என்பதில் பெருமை அடைகிறோம்.. அவரின் ஆதரவாளர்களும் கேப்டனை பின்பற்றுகின்றனர்..
விஜய் அண்ணா தற்போது கட்சி தொடங்கி உள்ளதால் அனைத்து இளைஞர்களும் அவரை பின்பற்றுகின்றனர்.. ஆனால் அவர் எப்படி அரசியல் தாக்குப்பிடிப்பார்.. எப்படி முன்னேறி செல்வார் என்பதை நாம் பார்க்க வேண்டும்..
தவெகவின் அனைத்து தொண்டர்களும் எங்கள் மீது கோபத்தில் உள்ளனர்.. நாங்கள் ஏன் அவர்களுடன் கூட்டணிக்கு செல்லவில்லை என்பது தான் அவர்களுடைய கோபம்.. ஆனால் அரசியலில் மிகவும் அடிப்படையான விஷயம், கூட்டணிக்கு தலைமை ஏற்க விரும்பினால் நீங்கள் தான் முதலில் உரையாடலை தொடங்க வேண்டும்.. இது அடிப்படையான விஷயம்.. அவர்கள் எங்களிடம் கூட்டணி பற்றி கேட்கவில்லை.. கேப்டனின் பெயரை மட்டும் பயன்படுத்துகின்றனர்..
தவெக தரப்பு எங்களிடம் கூட்டணிக்கு வருகிறீற்களா என்று கேட்கவில்லை.. விஜய் அண்ணாவை யாரும் அவ்வளவு எளிதில் அணுக முடியாது என்பது அனைவருக்கும் தெரியும்.. அவர்கள் எங்களை குற்றம்சொல்ல முடியாது.. உண்மையான கேப்டன் ரசிகர்கள் தவெகவுக்கு செல்ல மாட்டார்கள்.. தேமதிக உடன் தான் இருப்பார்கள்.” என்று தெரிவித்தார்..
