2026 சட்டமன்றத் தேர்தல்: புதுச்சேரி, கேரளம் ,அசாம் மாநிலங்களில் இன்று மாலையுடன் பரப்புரை நிறைவு! – assembly election campaigning in puducherry, kerala, and assam concludes this evening, april 7th

2026-ஆம் ஆண்டு அசாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல்களுக்கான தேதிகளை கடந்த மார்ச் 15 ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களிலும் 1.74 கோடி மக்கள் வாக்களிப்பார்கள் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தெரிவித்தார். இந்த ஐந்து மாநிலங்களிலும் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். இந்த 5 மாநிலங்களில் மொத்தம் 824 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறும். வங்காளம் மற்றும் அசாம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவு எப்போது, எங்கே, எத்தனை கட்டங்களாக நடைபெறும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். இத்துடன், கோவா, கர்நாடகா, நாகாலாந்து மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் ஏப்ரல் 9-ஆம் தேதியும், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் ஏப்ரல் 23-ஆம் தேதியும் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் நடைபெறும் என்று தெரிவித்தார்.

டென்ஷன் ஆகும் திமுக ஆதரவாளர்கள்! காரணம் காங்கிரஸ்?

5 மாநில வாக்கு நடைப்பெறும் நாள்

1. அஸ்ஸாம் – வாக்குப்பதிவு நாள் – ஏப்ரல் 9; வாக்கு எண்ணிக்கை நாள் – மே 4
2. தமிழ்நாடு – வாக்குப்பதிவு நாள் – 23 ஏப்ரல்; வாக்கு எண்ணிக்கை நாள் – 4 மே
3. மேற்கு வங்கம் – வாக்குப்பதிவு தேதிகள் – ஏப்ரல் 23 (முதல் கட்டம்), ஏப்ரல் 29 (இரண்டாம் கட்டம்); வாக்கு எண்ணிக்கை தேதி – மே 4
4. கேரளா – வாக்குப்பதிவு நாள் – ஏப்ரல் 9, வாக்கு எண்ணிக்கை நாள் – மே 4.
5. புதுச்சேரி – வாக்குப்பதிவு நாள் – 9 ஏப்ரல், வாக்கு எண்ணிக்கை நாள் – 4 மே நடைபெற உள்ளது.

அந் த வகையில்,ஏப்ரல் 9 ஆம் தேதி அசாம், புதுச்சேரி கேளரா உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற உள்ளது. அசாமில் 126 தொகுதிகள், கேரளாவில் 140 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

இன்று மாலையுடன் பரப்புரை நிறைவு

கேரளாவில் காங்கிரஸ், பாஜக மற்றும் இடதுசாரிகள் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி பிரச்சாரத்தில் ஈடுப்பட்டது. குறிப்பாக புதுச்சேரி மற்றும் கேளரா தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி வருகை தந்தனர். அப்போது ராகுல் காந் தி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தான் செய்த ஊழலை மறைப்பதற்காக பாஜகவுடன் சமரசத்தில் ஈடுப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இதற்கு பதிலடி தரும் வகையில் 2021ஆம் ஆண்டு அளித்த வாக்குறுதிகளில் 97 சதவீதத்தை நிறைவேற்றியுள்ளதாக இடது சாரிக்கட்சிகள் வெள்ளை அறிக்கை வெளியிட்டு வாக்கு சேகரித்து வந்தது. மேலும் பிரதமர் மோடி பாஜக ஆட்சிக்கு வந்தால், கேளரா சுற்றுலா துறையில் உலக அளவில் முதலிடம் வரும் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.

அதே போல், அசாமில் பேசிய பிரதமர் மோடி, அசாம் மாநிலத்தில் அமைதி மற்றும் வளர்ச்சி தொடர காங்கிரஸை ஆட்சியிலிருந்து விலக்கி வைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

புதுச்சேரியில், தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் ஏப்ரல் 6 ஆம் தேதி மத்திய அரசு புதுச்சேரிக்கு முழுமையான மாநில அந்தஸ்து வழங்க எந்த ஆர்வமும் காட்டவில்லை என்று குற்றம் சாட்டினார். சட்டப்பேரவை 14 முறை தீர்மானம் நிறைவேற்றியிருந்தாலும் அதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் கூறினார்.இதனால், பிரச்சாரக்களம் சூடுப்பிடித்தது.

அரசியல் கட்சித் தலைவர்கள் மாறி மாறி அதிகாரத்தில் உள்ள கட்சிகள் செய்ய தவறிய குற்றச்சாட்டுகளை முன் வைத்து பிரச்சாரத்தில் ஈடுப்பட்டன.இந் த நிலையில், இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவு பெறுகிறது. நாளை மறுதினர் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link