23 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு 16ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தூத்துக்குடி மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, வட்டார இயக்க மேலாண்மை அலகில் காலியாக உள்ள 23 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களை ஒப்பந்த முறையில் நிரப்பிட விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தூத்துக்குடி மாவட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கான தகுதி மற்றும் விண்ணப்ப படிவம் thoothukudi.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றுகளின் நகல்களுடன் தூத்துக்குடி மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் அலுவலகத்தில் அனைத்து வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை நேரிலோ அல்லது இணை இயக்குநர் / திட்ட இயக்குநர், தமிழ்நாடு ஊரக வாழ்வாதர இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், இரண்டாவது தளம், கோரம்பள்ளம் – 628101, தூத்துக்குடி மாவட்டம் என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாகவோ 16.2.2026 (திங்கட்கிழமை) மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Source link