விஜய பிரபாகரன் பெயரில் ரூ.41 கோடி கடன்… வெளியானது சொத்து விவரம்! – dmdk virudhunagar candidate vijaya prabhakaran declares ₹41 crore debt in affidavit

தமிழகத்தில் நேற்றைய தினம் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. அனைத்து கட்சியினரும் தங்களின் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். தமிழகத்தில் நான்கு முனை போட்டி என்ற சூழல் நிலவுவதால் தேர்தல் வேலைகள் தீவிரமடைந்து வருகின்றன.

இந்த சூழலில்தான் தமிழகத்திலிருந்து மொத்தம் 14 ஆயிரத்து 612 வீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருக்கின்றது. அதில் 3236 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன 513 மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன. 997 வேட்பு மனுக்கள் பரிசீலனையில் இருக்கின்றன. இவற்றோடு 1899 வேட்பாளர்கள் போட்டியிட இருக்கின்றனர் என தேர்தல் ஆணையம் தனது இணைய பக்கத்தில் தெரிவித்துள்ளது. வருகிற ஒன்பதாம் தேதி வேட்பு மனு திரும்ப பெறுவதற்கான கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

திமுக கூட்டணி தங்களுக்கான தேர்தல் வேலைகளில் மிக தீவிரமாக இயங்கி வருகிறது. அதிக கட்சிகள் திமுகவில் இடம் [பிடித்தாலும், இம்முறை 10 தொகுதிகளை பெற்று கவனம் பெற்றது தேமுதிக. இந்த சூழலில்தான் திமுக கூட்டணியில் இருக்கக்கூடிய தேமுதிக கட்சியின் சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட உள்ள விஜய பிரபாகரனின் பிரமாண பத்திரம் கவனம் பெற்று இருக்கிறது. அவரின் சொத்து விவரங்கள் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பணக் கையிருப்பு தகவல்

மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகனும் தேமுதிக வின் இளைஞர் அணி செயலாளருமான விஜய பிரபாகரன் ஏழு வங்கிகளில் கணக்கு வைத்திருக்கிறார். மேலும் அவர் கயிறுப்பில் ஒரு லட்சத்து 45 ஆயிரம் பணம் வைத்திருக்கிறார்.

முதலீடுகள்
  • கேப்டன் மீடியா பிரைவேட் லிமிடெட்டில் 2 கோடியே 25 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளார்.
  • கேப்டன் பாம்ஸ் பிரைவேட் லிமிடெட் டில் பங்கு தாரராக உள்ளார்.
  • பிபிஎஸ் பார்ம்ஸ் பிரைவேட் லிமிடெட் 2 இலட்சம் ரூபாய் பங்கு வைத்து இருக்கிறார்
  • மேலும் டிபிவிஎஸ் ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெடிலும் பங்குதாரராக இருக்கிறார்.
ஐந்து வாகனங்கள்

விஜய பிரபாகர் சொந்தமாக ஐந்து வாகனங்கள் வைத்திருப்பதாக தனது பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.

  • Bmw M4 comp. MX drive car இந்த காரின் மதிப்பு 1கோடியே 29 லட்சம் ரூபாய் ஆகும்.
  • Honda jaz car 2010 மாடலான இந்த காரின் மதிப்பு 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் ஆகும்.
  • Horse traveler monobus இதன் மதிப்பு 27 லட்சத்து 54,000 ரூபாய் ஆகும்.
  • Defender 130x என்ற உயர்ரக கார் ஒன்றை வைத்து இருக்கிறார்.இதன் விலை 1 கோடியே 52 லட்சத்து 98,000 ரூபாய் ஆகும்.
  • மேலும் இவற்றோடு ஒரு ராயல் என்ஃபீல்டு இருசக்கர வாகனமும் வைத்திருக்கிறார்.
  • மேலும் விஜய பிரபாகரன் தன்வசம் 295 கிராம் தங்கமும் 595 கிராம் வெள்ளியும் இருப்பதாக தனது பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

மேற்கூறியவற்றின் ஒட்டுமொத்த மதிப்பு 19 லட்சத்து 70 ஆயிரத்து 59 ஆயிரம் ஆகும்.

அசையா சொத்துக்கள்

விஜயபிரபாகரன் தனது பெயரில் மதுரையில் இரண்டு ஏரியாக்களில் நிலமும் கோயம்புத்தூரில் ஒரு இடமும் வாங்கி வைத்திருக்கிறார். இந்த இடங்களின் மதிப்பு ரூ. 98 லட்சத்து 52 ஆயிரம் ஆகும்.
மதுரையில் பொன்னம்மாள் ரோட்டில் ஒரு வணிக கட்டடத்தை சொந்தமாக வைத்திருக்கிறார். இதன் மதிப்பு ரூ.2 கோடியே 91 லட்சம் ஆகும்.

மேலும் சென்னை மற்றும் மதுரையில் ஐந்து இடங்களில் அடுக்குமாடி குடியிருப்பு வைத்திருக்கிறார். இவற்றின் மொத்த மதிப்பு 9 கோடியே 2 லட்சத்து 27 ஆயிரம் ஆகும்.

கடன் விவரம்

விஜய பிரபாகரன் பெயரில் ரூ. 41,59,26,507 கடன் உள்ளதாக பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதிகபட்ச கடன் தொகையாக ரூ.28,50,00,000 -யை தனலட்சுமி ஸ்ரீனிவாசன் இடமிருந்து பெற்றிருக்கிறார்.

Source link