சிஎஸ்கே ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி… டெல்லிக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் தோனி?

சென்னை,

ஐபிஎல் 2026 சீசனுக்காக தயாராகி வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, காயம் காரணமாக ஆரம்ப போட்டிகளில் இருந்து விலகியிருந்தார். பின்னங்காலில் ஏற்பட்ட தசை பிடிப்பு பிரச்சினையால் முதல் இரண்டு வாரங்களுக்கு அவர் விளையாட முடியாது என்று சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்தது. தோனியின் ஆட்டத்தை பார்க்க ஆர்வத்துடன் இருந்த ரசிகர்களுக்கு இது பெரும் ஏமாற்றத்தை அளித்தது.

இதற்கிடையில், சென்னை சூப்பர் கிங்கிஸ் அணி விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் தோனி எப்போது அணிக்கு திரும்புவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், சென்னை அணியின் வலைப்பயிற்சியில் தோனி மீண்டும் பயிற்சியை தொடங்கியுள்ளார். இதுதொடர்பான காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

காயத்திலிருந்து மீண்டு வருகிற தோனி, ஏப்ரல் 11ம் தேதி நடைபெறவுள்ள டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகம் நிலவி வருகிறது.

Source link