தேர்வு இல்லாமல் இந்திய கடற்படையில் வேலை..

இந்திய கடற்படையின் கப்பல் பழுதுபார்க்கும் தளம் மற்றும் விமானத் தளங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியிட விவரம்:

பிட்டர் (Fitter) பிரிவு – 31,

கம்ப்யூட்டர் ஆபரேட்டர் – 21,

எலக்ட்ரீசியன் (Electrician) பிரிவு – 29,

எலக்ட்ரானிக் மெக்கானிக் – 18,

இன்ஸ்ட்ரூமென்ட் பிரிவு – 15,

வெல்டர் (Welder) பிரிவு – 14,

வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயது 01.06.2026 தேதியின்படி குறைந்தபட்சம் 18 வயது மற்றும் அதிகபட்சம் 60 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, முழுமையாக பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை “The Admiral Superintendent (for Officer-in-Charge ATS), Apprentices Training School, Naval Ship Repair Yard, Naval Base, Kochi – 682 004” என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

கடைசி தேதி: இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 17.04.2026 என அறிவிக்கப்பட்டுள்ளது.

Source link