தமிழ்நாடு ஜெயிக்கணும்னா எடப்பாடியார் ஆளணும் – அதிமுக தேர்தல் பிரசார பாடல் வெளியீடு

சென்னை,

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி நிலவுகிறது. தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஆதரித்து அந்தந்த கட்சி தலைவர்களும், முக்கிய நிர்வாகிகளும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று அவர் தான் போட்டியிடும் சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் மனு தாக்கல் செய்தார்.

இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுகவின் தேர்தல் பிரசார பாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ‘தமிழ்நாடு ஜெயிக்கணும்னா எடப்பாடியார் ஆளணும்’ என்ற முழக்கத்தை முன்னிறுத்தி இந்த பாடல் வெளியிடப்பட்டுள்ளது. “ஏழைகள் சிரிக்கணும்னா இரட்டை இலை ஆளணும்; தமிழ்நாடு ஜெயிக்கணும்னா எடப்பாடியார் ஆளணும்” உள்ளிட்ட வரிகள் இந்த பாடலில் இடம்பெற்றுள்ளன.

Source link