சிபிஐ விசாரணை
ஒரே குடும்பத்தை சார்ந்த அப்பா, மகன் இருவரும் காவல் துறை அதிகாரிகளால் அடித்து கொல்லப்பட்டது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது சம்பந்தமாக சிபிசிஐடி விசாரணை மேற்கொண்ட சமயத்தில், மதுரை உயர்நீதிமன்ற அமர்வு தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்தது. இதனையடுத்து இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில், கொலை வழக்ககாக பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், நேற்றைய தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது.
சாத்தான்குளம் வழக்கு
அதன்படி சாத்தான்குளம் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 9 காவல் அதிகாரிகளும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டு, அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இது போன்ற வழக்குகளில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டால், காவல் துறையினருக்கு அச்சம் ஏற்படாது. இதுபோல் ஒரு சம்பவம் எதிர்காலத்தில் நிகழாமல் இருக்க வேண்டும். அதோடு இதுபோல் செயல்படும் காவல்துறையினருக்கு தூக்கு தண்டனை தான் பரிசாக என்பதை உணர்த்தும் வகையில் இந்த தீர்ப்பு இருக்க வேண்டும்.
தண்டனை அறிவிப்பு
எனவே காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 பேருக்கும் இந்த வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்படுவதாக தீர்ப்பளித்தார் நீதிபதி. இந்த தீர்ப்பு பலத்தரப்பில் இருந்தும் வரவேற்பினை பெற்று வருகிறது. எளிய மக்கள் மீது காவல்துறை கட்டவிழ்த்து விடும் வன்முறைகளுக்கு இந்த தீர்ப்பு ஒரு பாடமாக அமையும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல் ஹாசன் சாத்தான்குளம் தீர்ப்பு குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளார்.
மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து
அதில், சட்டத்தை அறிந்தவர்களும் பொதுமக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்புக் கொண்டவர்கள் சிறிதும் ஈவிரக்கமில்லாமல் இந்த கொடுமைகளை செய்துள்ளார். இதனை பற்றி அறியும் போதே நெஞ்சம் பதைக்கிறது. நாட்டையே அதிர வைத்த இந்த அநீதித்து எதிராக போராடிய அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள். ஆதாரத்துடன் இந்த குற்றத்தை நிரூபித்த சிபிஐ விசாரணை அதிகாரிகளுக்கு பாராட்டுக்கள் என தெரிவித்துள்ளார்.
மரண தண்டனைக்கு எதிரானவன்
அதோடு தனிப்பட்ட முறையில் மரண தண்டனைக்கு எதிரானவன் தான் என தெரிவித்துள்ளவர், கொடுங்குற்றம் செய்தவர்கள் எந்த விதமான சலுகையும் கிடைக்காமல் ஆயுள் முழுவதும் சிறை வைக்கப்பட வேண்டும் என்பதே தன்னுடைய நிலைப்பாடு என தெளிப்படுத்தியுள்ளார். மேலும் காவல் துறையின் கொலைவெறி தாக்குதலுக்கு ஆளாகி படுகாயம் அடைந்தவர்களை பார்க்காமல் சான்றிதழ் அளித்த மருத்துவர்.
என்னுடைய மனது ஏங்குகிறது
இந்த கொடூர சம்பவத்தின் உண்மையை மறைக்க முயன்ற அதிகாரிகள், ரிமாண்ட் செய்ய உத்தரவிட்ட நபர் மற்றும் மனசாட்சி இல்லாம் மூச்சு திணறல் காரணமாக ஜெயராஜ், பென்னிக்ஸ் இறந்தார்கள் என்று பேசிய ஆட்சியாளர்கள் ஆகியோருக்கும் தண்டனை விதிக்கப்பட வேண்டுமென தன்னுடைய மனது ஏங்குவதாக தெரிவித்துள்ளார் கமல்.
அதோடு நம்மை யார் என்ன செய்துவிட முடியும் என்ற துணிச்சலில் அதிகாரத்தை கையில் வைத்து குற்றம் இழைப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அப்பாவி மக்களுக்கு எதிராக அதிகார மமதையில் நிகழும் கொடுமைகள் ஒழிக்கப்பட வேண்டும் எனவும் தன்னுடைய பதிவில் வலியுறுத்தியுள்ளார் கமல் ஹாசன்.
