‘ஹோர்மூஸ் நீரிணையில் அமெரிக்கா ஏன் சுங்கம் வசூலிக்கக் கூடாது?” – டிரம்ப்

ஆர்டெமிஸ் 2 விண்வெளி வீரர்களுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசினார். இன்று வரலாறு படைக்கப்பட்டுள்ளது என்றும், ஒட்டுமொத்த அமெரிக்காவும் பெருமை கொள்கிறது என்று அவர் கூறினார்.

நாசாவின் ஆர்டெமிஸ்-2 திட்ட விண்வெளி வீரர்கள் நான்கு பேர், விண்வெளியில் இதுவரை எந்த மனிதனும் செல்லாத, பூமியிலிருந்து தொலைதூர பகுதியை அடைந்துள்ளனர்.

“நாம் பெருமைப்பட நிறைய இருக்கிறது, ஆனால் நீங்கள் செய்வது போல் எதுவும் இல்லை; நிலவைச் சுற்றி வந்து, பூமியிலிருந்து மிகத் தொலைவான தூரத்திற்கான சாதனையை படைத்துள்ளீர்கள்,” என்று டிரம்ப் ஆர்டெமிஸ் 2 விண்வெளி வீரர்களிடம் கூறினார்.

டிரம்ப் மேலும் கூறுகையில், “மனிதர்கள் இதுபோன்ற ஒரு காட்சியைக் கண்டதில்லை. இது மிகவும் சிறப்பானது,” என்றார். பின்னர் அவர் ஆர்டெமிஸ் குழுவுக்கும் நாசாவுக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

இந்தத் திட்டம் முடிந்த பிறகு வெள்ளை மாளிகையில் ஆர்டெமிஸ் குழுவினரைச் சந்திப்பதாக டிரம்ப் கூறினார். அவர், “நானும் மிகவும் வேலையாக இருக்கிறேன், ஆனாலும் நேரம் ஒதுக்குவேன். அமெரிக்க மக்கள் சார்பாக, உங்களுக்கு எனது மனமார்ந்த வணக்கத்தைத் தெரிவிக்க விரும்புகிறேன்,” என்றார்.

இந்தத் திட்டத்தில் அமெரிக்க விண்வெளி வீரர்களான ரீட் வைஸ்மேன், கிறிஸ்டின் கோச், விக்டர் குளோவர் மற்றும் கனடிய விண்வெளி வீரர் ஜெர்மி ஹேன்சன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link