முதல்வர், துணை முதல்வர், இபிஎஸ், விஜய் வேட்புமனுக்கள் ஏற்பு

சென்னை கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேட்புமனு ஏற்கப்பட்டது. சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் வேட்புமனுவும் ஏற்கப்பட்டு உள்ளது.

களை கட்டும் தேர்தல் களம் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று ஏப்ரல் 7ஆம் தேதி நடைபெற்றது. சென்னை கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின், பெரம்பூர் தொகுதியில் விஜய் ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் 234 தொகு​தி​களி​லும் ஒரே கட்​ட​மாக ஏப்ரல் 23ஆம் தேதி நடை​பெற உள்​ளது. இதற்​கான வேட்​புமனு தாக்​கல் கடந்த மார்ச் 30ஆம் தேதி தொடங்​கியது. முதல் நாளில் முதல்​வர் ஸ்டா​லின், தவெக தலை​வர் விஜய், நாதக தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் உள்​ளிட்​டோர் வேட்​புமனுக்​களை தாக்​கல் செய்​தனர். அதன்​பின்​னர், 4 பொது விடு​முறை நாட்​களில் மனு தாக்​கல் நடை​பெற​வில்​லை.

இந்​நிலை​யில், வேட்​புமனு தாக்​கல் செய்ய நேற்று கடைசி நாள் என்​ப​தால், அனைத்து தொகு​தி​களி​லும் காலை முதலே மனு தாக்கல் களை​கட்​டியது. எடப்​பாடி​யில் அதிமுக பொதுச் செய​லா​ளர் எடப்பாடி பழனி​சாமி, விருத்​தாசலத்​தில் தேமு​திக பொதுச் செய​லா​ளர் பிரேமலதா விஜய​காந்த் ஆகியோர் வேட்புமனுக்​களை தாக்​கல் செய்​தனர்.

வேட்பு மனுக்கள் பரிசீலனை சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று தொடங்கியிருக்கும் நிலையில், கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் வேட்பு மனு ஏற்கப்பட்டது. இத்தொகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நான்காவது முறையாக போட்டியிடுகிறார். பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் தவெக தலைவர் விஜய்யின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் துணை முதல்வர் உதயநிதி, சாத்​தூரில் தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், தருமபுரியில் சவுமியா அன்புமணி, காரைக்குடியில் சீமான் ஆகியோரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளன. தியாகராய நகரில், தவெக வேட்பாளர் என்.ஆனந்த் வேட்புமனு ஏற்கப்பட்டது.

             

Source link