Seeman About Vijay Campaign,நான் சந்திக்காத நெருக்கடியா ? பயந்தால் வீட்டை விட்டு வெளியே வரமுடியாது…தவெக தலைவர் விஜய்க்கு சீமான் அட்வைஸ் – seeman advice to vijay on the struggles faced during election campaign

விஜய்யின் பரப்புரைக்கு தொடர்ந்து நெருக்கடி தரப்படுவதாக தவெகவினர் புகார் கொடுத்து வருகின்றனர். திமுக அரசும் அந்த அரசிற்கு உடந்தையாக இருக்கும் காவல்துறையும் தவெக தலைவர் விஜய்யை பரப்புரை செய்யவிடலாமல் தடுக்கின்றனர். பரப்புரைக்கு சரியான பாதுகாப்பு வழங்காமல் இருக்கின்றனர் என தொடர்ந்து கூறி வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு கூட விஜய் வில்லிவாக்கம், திநகர் உள்ளிட்ட பகுதிகளில் பரப்புரை செய்ய இருந்தார்.

விஜய்யின் பரப்புரைக்கு நெருக்கடி

ஆனால் வில்லிவாக்கம் பகுதியில் விஜய்க்கு ஒரு மணி நேரம் மட்டுமே பரப்புரை செய்ய அனுமதி வழங்கப்பட்டது. திநகர் பகுதி நெரிசலான பகுதி என்பதால் அங்கு பரப்புரைக்கு அனுமதி கொடுப்பதில் சிக்கல் இருப்பதாக காவல்துறை தெரிவித்து இருக்கின்றனர். இதனால் அதிருப்தியடைந்த தவெகவினர் காவல்துறை மீதும் திமுக அரசு மீதும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் இதனால் விஜய் கடந்த இரண்டு நாட்களாக பரப்புரை செய்யாமல் இருக்கின்றனர்.

அவருக்கு அனுமதி வழங்கப்பட்ட வில்லிவாக்கம் தொகுதியிலும் விஜய் பரப்புரை செய்யவில்லை. இந்நிலையில் விஜய்யின் பரப்புரைக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுப்பதாக தவெகவினர் கூறி வரும் நிலையில் இதற்கு சீமான் தன் கருத்தினை கூறியுள்ளார். பரப்புரை அனுமதி வழங்குவது எல்லாம் தேர்தல் ஆணையத்தின் பொறுப்பில் தான் உள்ளது. அப்படியெல்லாம் தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு நெருக்கடி தரமாட்டார்கள். அப்படி ஒரு நெருக்கடி கொடுக்கும் தேவை அவர்களுக்கு இல்லை.

சீமான் அறிவுரை

நெருக்கடியை தாண்டி களத்தில் போராட வேண்டும். அவன் தான் வீரன்.நான் சாதிக்காத நெருக்கடிகளா ? 2008 ஆண்டுகளில் எனக்கு தங்குவதற்கு விடுதி கூட தரமாட்டார்கள், பல வழக்குகள் போடப்பட்டது. ஏறாத நீதிமன்றம் கிடையாது. அவ்வளவு போராட்டங்களை கடந்து தான் வந்திருக்கின்றேன். அடக்குமுறைக்கு எல்லாம் அஞ்சக்கூடாது, தொடர்ந்து களத்தில் போராடுபவனை தான் மக்கள் போற்றுவார்கள். அப்படி என்ன செய்துவிடுவார்கள் ? வழக்கு தானே போடுவார்கள், என்ன நடந்தாலும் போராட வேண்டும் என்ற மனநிலையில் இருக்க வேண்டும்.

அதற்கெல்லாம் பயந்தால் கடைசிவரை வீட்டிலேயே இருக்க வேண்டியது தான். எனக்கும் தான் பல தடைகள் போட்டார்கள். அதையெல்லாம் மீறி தான் நான் போராடிக்கொண்டு இருக்கின்றேன். எனவே பயப்படக்கூடாது ,தடையை மீறி போராடனும் என்பது தான் சீமானின் அறிவுரையாக இருக்கின்றது. மேலும் சட்டமன்ற தேர்தலில் சீமானை பின்னுக்கு தள்ளி விஜய் மூன்றாம் நிலைக்கு வருவாரா ? என்றுமவரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர் எனக்கு வாக்களித்தவர்கள் எல்லாம் ரசிகர்கள் அல்ல, திரையில் தலைவர்களை தேடியவர்கள் அல்ல, தரையில் போராடும் தலைவனை தேடியவர்கள் என கூறி என் வாக்குகளை எல்லாம் விஜய்யால் பிரிக்க முடியாது என்பது போல பேசினார் சீமான். இந்நிலையில் திமுகவிற்கு சீமானும் எதிர்க்கட்சி தான். அவரும் திமுகவை கடுமையாக விமர்சித்து தான் வருகின்றார். ஆனால் பரப்புரை தொடர்பான விஷயமெல்லாம் தேர்தல் ஆணையம் பொறுப்பில் தான் உள்ளது என அவரே கூறியிருக்கின்றார்.

ஆனால் விஜய்யின் தரப்பு காவல்துறையையும் திமுக அரசையும் தான் குறை கூறி வருகின்றனர். மறுபக்கம் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தொடர்ந்து பரப்புரை செய்து தான் வருகின்றனர். மேலும் விஜய்க்கு வில்லிவாக்கத்தில் பரப்புரை செய்ய ஒரு மணி நேரம் அனுமதி வழங்கப்பட்டது. அந்த அனுமதியை பயன்படுத்தி விஜய் விரிவாக்கத்தில் பரப்புரை செய்திருக்கலாம் என்பது தான் பெரும்பாலானோரின் கருத்து.

ஆனால் மற்ற தொகுதிகளில் உரிய அனுமதி கிடைக்கவில்லை, வில்லிவாக்கத்திலும் நான்கு மணி நேரம் அனுமதி கொடுத்து பிறகு ஒரு மணி நேரமாக அனுமதியை மாற்றியதால் பரப்புரையை ரத்து செய்தார் விஜய். அதனை ரத்து செய்யாமல் வில்லிவாக்கத்தில் விஜய் பரப்புரை செய்திருந்தால் கண்டிப்பாக அந்த பரப்புரை கவனத்தை ஈர்த்திருக்கும்.ஆனால் விஜய் அந்த வாய்ப்பினை மிஸ் செய்துவிட்டார் என்பது தான் பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது.

தொடர்ந்து விஜய்யின் பரப்புரைக்கு நெருக்கடி கொடுப்பதாக அவர்களால் சொல்லப்படுகின்றது. அந்த நெருக்கடி குறித்து குற்றம்சாடாமல் தொடர்ந்து போராடி இந்த தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் தவெக கட்சியை ஆதரிப்போரின் எண்ணமாக இருக்கின்றது.

Source link