தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026: வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பாளர்கள் யார்? யார்? முழுவிரம் இதோ! – tamil nadu assembly election 2026 nomination filing accepted candidates nomination list

சட்டமன்ற தேர்தலையொட்டி வேட்புமனுத் தாக்கல் செய்த வேட்பாளர்களின் யாருடைய வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

வேட்புமனுத்தாக்கல்
தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தலையொட்டி வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவு பெற்றது. தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக வருகிற ஏப்ர 23-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த மார்ச் மாதம் 30ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளில் 573 வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டன. முதல்வர் மு க ஸ்டாலின்,நாதக சீமான், தவெக தலைவர் விஜய் மற்றும் அமைச்சர்கள் என முக்கிய அரசியல் பிரமுகர்கள் முதல் நாளில் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026​

இதில் மார்ச் 31 ஏப்ரல் 1 ,3 ,5 ஆகிய தேதிகள் அரசு விடுமுறை நாட்கள் என்பதால் மார்ச் 30 ஏப்ரல் 2,4,6 ஆகிய நான்கு நாட்கள் மட்டுமே வேட்புமனுத் தாக்கல் நடைபெற்றது.அதன்படி நேற்றுடன் ஏப்ரல் 6 வேட்பமான தாக்கல் நிறைவு பெற்றது. கடைசி நாளான நேற்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி,பிரேமலதா விஜயகாந்த் ,ஓ பன்னீர்செல்வம், வானதி ஸ்ரீனிவாசன் ,தமிழிசை சௌந்தர்ராஜன், சௌமியா அன்புமணி, எல். முருகன், எ.வ. வேலு, சேகர் பாபு, கீதா ஜீவன், துரைமுருகன் ,அமைச்சர் காந்தி ,செந்தில் பாலாஜி, சி.வி. சண்முகம், காட்டுமன்னார்கோவில் ஜோதிமணி உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் நேற்று தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்

வேட்புமனுத்தாக்கல் இன்று பரீசிலனை

இதனைத் தொடர்ந்து நான்கு நாட்களில் 4, 574 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நேற்று மட்டும் சுமார் 2500 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்துவேட்பு மனுக்கள் பரிசீலனை இன்று நடைபெற்று வருகிறது. மேலும் வேப்பமனுவை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் ஏப்ரல் 9ம் தேதியாகும். அதன்படி அரசியல் கட்சி தலைவர்களின் வேட்புமனு ஏற்கப்பட்டதும்,நிராகரிக்கப்பட்டது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

  • கொளத்தூரில் முதலமைச்சர் மு .க .ஸ்டாலின் வேட்புமனு ஏற்பு
  • சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வேட்பு மனுஏற்பு
  • பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்குத் தொகுதியில் வேட்பு மனுஏற்பு
  • காரைக்குடி சட்டமன்ற தொகுதியிலும் நாதக சீமான் வேட்பு மனுஏற்பு
  • வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் ஆதவ் அர்ஜூனா வேட்புமனு ஏற்பு
  • மயிலாப்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் தமிழிசைவேட்பு மனுஏற்பு
  • திருச்சுழியில் அமைச்சர் தங்கம் தென்னரசுவின் வேட்பு மனுஏற்பு
  • கோவை தொண்டாமுத்தூரில் எஸ் பி வேலுமணி வேட்பு மனுஏற்பு
  • கடலூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம் சி சம்பத்குமார் வேட்புமனு ஏற்பு
  • ்திருவி நகர் வேட்பாளர் பொற்கொடி வேட்பு மனுஏற்பு
  • சிதம்பரம் தொகுதியில் தவெக வேட்பாளர் பாரியின் வேட்புமனு தள்ளுபடி
  • வெக நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன்
  • வேட்பு மனு பரிசீலனை நிறுத்திவைப்பு
  • ல் தருமபுரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் செளமியா அன்புமணி வேட்புமனு ஏற்பு
  • திண்டுக்கலில் ராமதாஸ் மற்றும் சசிகலா வேட்புமனு ஏற்பு

போடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக சார்பில் ஓபிஎஸ், அதிமுக சார்பில் நாராயணசாமி, நாம் தமிழர் கட்சியின் கலையரசு மற்றும் தவெக கட்சியின் பிரகாஷ் ஆகியோரின் வேட்புமனுக்கள் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.அதேபோல், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் செந்தில்பாலாஜி, அதிமுக சார்பில் அம்மன் அர்சுணன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் பேரறிவாளன் ஆகியோரின் வேட்புமனுக்களும் ஏற்க்கப்பட்டுள்ளது.