இந்நிலையில் விஜய் நாளை திருநெல்வேலியில் மட்டும் தான் பரப்புரை செய்வாரா ? அல்லது தூத்துகுடியிலும் பரப்புரை செய்வாரா ? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இந்த கேள்விக்கு தவெக கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் பதிலளித்திருக்கிறார். நாளை திருநெல்வேலியில் தலைவர் விஜய் பரப்புரை செய்யவுள்ளார். மாலை பரப்புரை எந்தெந்த இடங்களில் நடைபெறும், எந்த நேரத்தில் நடைபெறும் என்பதனை ட்விட்டரில் அதிகாரபூர்வமாக அறிவிப்போம்.
விஜய்யின் திருநெல்வேலி பரப்புரை
நாளை திருநெல்வேலியில் மக்களை சந்திக்க தான் விஜய் வருகின்றார். திருநெல்வேலி மாவட்ட வேட்பாளர்கள் மட்டுமே தான் இங்கு இருப்பார்கள். நாளை திருநெல்வேலி மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து தான் விஜய் பேசுவார். தூத்துக்குடி வேட்பாளர்கள் நாளை இந்த பரப்புரையில் பங்குபெற மாட்டார்கள். அவர்களுக்காக தூத்துக்குடி சென்று விஜய்பரப்புரை செய்வார். நாளை திருநெல்வேலியில் மட்டும் தான் பரப்புரை நடைபெறும். அது மக்கள் சந்திப்பு கூட்டமா ? ரோடு ஷோவா என்பதெல்லாம் இன்று மாலை நாங்கள் அறிவிப்போம் என்றார் என்.ஆனந்த்.
இதைத்தாண்டி வேறு எங்கெல்லாம் விஜய் பரப்புரை செய்ய இருக்கின்றார் ? அவரின் பரப்புரைக்கான திட்டங்கள் என்ன ? என்று ஆனது அவர்களிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் ,காவல்துறை அனுமதி கொடுத்த பிறகு உங்களுக்கு நாங்கள் அறிவிப்போம் என கூறினார் ஆனந்த். ஆனால் காவல்துறை தரப்பில் இருந்து உங்களுக்கு அனுமதி கொடுத்ததாக சொல்கிறார்களே ? அப்போ உங்களுக்கு காவல்துறையின் அனுமதி கடிதம் இன்னும் வரவில்லையா ? கருத்துக்கள் முரணாக உள்ளதே என அடுத்தடுத்து என்.ஆனந்திடம் கேள்வி கேட்கப்பட்டது.
என்.ஆனந்த் பேச்சு
அதற்கு அவர் சிரித்துக்கொண்டே ,இதற்கெல்லாம் தான் நாங்க பிரஸ் மீட்டே வைக்குறது கிடையாது ? பொறுமையாக எல்லாத்தையும் விவரமாக சொல்வோம் என சிரித்துக்கொண்டே சென்றார் என்.ஆனந்த். இந்நிலையில் விஜய்யின் பரப்புரை குறித்தான கேள்விகளுக்கு என்.ஆனந்த் சற்று தடுமாற்றமான பதில் கொடுத்தது தான் தற்போது பேசும்பொருளாக மாறியிருக்கின்றது.
குறிப்பாக பரப்புரைக்கான அனுமதியை காவல்துறையினர் கொடுத்தாக சொல்கிறார்களே ? என்ற கேள்விக்கும என்.ஆனந்த் சரியாக பதிலளிக்கவில்லை.இதற்கு தான் பிரஸ் மீட் வைக்குறது கிடையாது என கூறிவிட்டு சென்றார். இதையெல்லாம் பார்க்கும் மக்கள் சிலர், பரப்புரை குறித்து கட்சியினர் தெளிவாக இல்லையா ? என கேள்வி கேட்கின்றனர். கட்சியின் தலைவரான விஜய்யின் பரப்புரை குறித்து தெளிவான திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்பட இல்லையோ ? என்ற கேள்வி எழுகின்றது.
குறிப்பாக தவெக தலைவர் விஜய்யின் பரப்புரைக்கு காவல்துறை அனுமதி வழங்கப்பட்டதா ? இல்லையா ? என்பது குறித்தும் என்.ஆனந்த் தெளிவாக சொல்லவில்லை. விஜய்யின் அடுத்தடுத்த பரப்புரை குறித்து இன்னும் திட்டமிடவில்லை என்பதால் தான் இந்த தடுமாற்றமா ? என்ற கேள்வியை மக்கள் முன் வைத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
