சென்னை,
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. இதற்கிடையில், சென்னை சூப்பர் கிங்கிஸ் அணி விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அடுத்த ஆட்டத்தில் வருகிற 11-ந்தேதி சென்னை சேப்பாக்கத்தில் டெல்லி கேப்பிட்டல்சுடன் மோதுகிறது.
இந்த நிலையில், சென்னை அணி வீரர் சஞ்சு சாம்சன் சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
