மது பிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..! புதுச்சேரியில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு மது விற்பனைக்கு தடை -முழுவிவரம் இதோ! – puducherry assembly elections sale of liquor banned for three days starting today

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலையொட்டி இன்று முதல் மூன்று நாட்களுக்கு மது விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

புதுச்சேரி மதுபான விற்பனை
புதுச்சேரியில் 30 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெற உள்ளது.கடந்த மார்ச் 15 ஆம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் புதுச்சேரியில் அமலுக்கு வந்தது.அதன்படி, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மே 6ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்
புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்

இந்த சூழலில் புதுச்சேரி தேர்தலை முன்னிட்டு மதுபானங்களை விற்க தேர்தல் அதிகாரிகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.தினமும் மதுபான விற்பனையை பதிவு செய்ய வேண்டும். அனைத்து கடைகளிலும் சிசிடிவி கேமரா இருக்க வேண்டும் என்ற விதிமுறை முன்பே வந்திருந்தது. வாக்குப்பதிவு ஏப்ரல் 9-ம் தேதி நடைபெற உள்ளதால் இன்று முதல் மூன்று நாட்களுக்கு மதுபான விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது.

மதுபான விற்பனைக்கு தடை
 மதுபான விற்பனைக்கு தடை

அதன்படி, கடைகளில் நேற்று இரவு விற்பனை முடிந்ததால் உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் மதுபானங்களை வாங்கி சென்றனர். நேற்று இரவு 10 மணிக்கு அனைத்து மதுபான கடைகளும் கலால் துறையினர் சீல் வைத்தனர். முன்னதாக மதுபான கிடங்குகளுக்கு நேற்று மாலை 5 மணிக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் புதுச்சேரியில் மட்டும் 453 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

தடையை மீறி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை
 தடையை மீறி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை

தடையை மீறி விற்பனை செய்தால் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்படும்.சம்மந்தப்பட்ட கடைகளின் உரிமை ரத்து செய்யப்படும் என்று கலால் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து தாசில்தார் ராஜேஷ் கண்ணா கூறுகையில் புதுச்சேரியில் 19 எல்லைகளில் வாகன தணிக்கை சோதனை சாவடிகள் அமைக்கப்பட்ட உள்ளது. 24 மணி நேரமும் மதுபானம் கொண்டு செல்லப்படுகிறதா உள்ளிட்டவை குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

புதுச்சேரி கல்லால் துறையில் கடும் கட்டுப்பாட்டு
புதுச்சேரி கல்லால் துறையில்  கடும் கட்டுப்பாட்டு

அதே நேரத்தில் கல்லால் துறையில் கட்டுப்பாட்டு அறைகளிலும் மதுபான கடைகள் கிடங்குகள் மற்றும் எல்லை பகுதியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணித்து வருவதாக கூறியுள்ளார். புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில் அரசியல் களம் பரபரப்புடன் காணப்படுகிறது.