ஏர் இந்தியா விமானத்தில் நாளை முதல் டிக்கெட் விலை உயர்வு ; பயணிகள் அதிர்ச்சி

டெல்லி,

அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல், வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்த போரால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

இதனால், ஜெட் விமான எரிபொருள் விலையும் உயர்ந்துள்ளது. இதையடுத்து, ஜெட் விமான எரிபொருள் விலையை அதிகபட்சமாக 25 சதவீதம் என மத்திய அரசு வரம்பு நிர்ணத்துள்ளது.

இதனால் உள்நாட்டு, வெளிநாட்டு பயணத்திற்கான எரிபொருள் கூடுதல் கட்டணத்தை ஏர் இந்தியா நிறுவனம் உயர்த்தியுள்ளது. அதன்படி, உள்நாடு, வெளிநாட்டில் பயண தூரத்திற்கு ஏற்ப எரிபொருள் கூடுதல் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த எரிபொருள் கூடுதல் கட்டண உயர்வால் விமான டிக்கெட் விலை நாளை முதல் உயர்த்தப்படும் என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

இந்த கூடுதல் கட்டண உயர்வு டிக்கெட் விலையில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் டிக்கெட் விலை உயர்ந்துள்ளது. டிக்கெட் விலை உயர்வால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

உள்நாட்டு பயணத்தின் எரிபொருள் கூடுதல் கட்டண உயர்வு விவரம்:

0-500 கி.மீ – ரூ. 299

501-1000 கி.மீ – ரூ. 399

1001-1500 கி.மீ – ரூ. 549

1501-2000 கி.மீ – ரூ. 749

2000கி.மீ அதிகமாக – ரூ. 899

வெளிநாட்டு பயணத்தின் எரிபொருள் கூடுதல் கட்டண உயர்வு விவரம்:

சார்க் நாடுகள் (வங்காளதேசம் தவிர) – 24 டாலர்கள்

மத்திய கிழக்கு நாடுகள் – 50 டாலர்கள்

சீனா & தென்கிழக்கு ஆசியா (சிங்கப்பூர் தவிர) – 100 டாலர்கள்

சிங்கப்பூர் – 60 டாலர்கள்

ஆப்பிரிக்கா – 130 டாலர்கள்

ஐரோப்பியா – 205 டாலர்கள்

வட அமேரிக்கா – 280 டாலர்கள்

ஆஸ்திரேலியா – 280 டாலர்கள்

Source link