சீனியாரிட்டி அடிப்படையில் ஆர்டர்களை பெறுவது தொடர்பாக தமிழக டிஜிபி சந்தீப் ராய் ரத்தோ உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
தேர்தல் நேர போலீஸ் பாதுகாப்பு
அதை தொடர்ந்து உறுதி செய்ய வேண்டும். நேர்மையான, சுதந்திரமான முறையில் தேர்தலை நடத்த வழிவகுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும் தேர்தல் காலத்தில் விரிவான முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவும் அறிவுறுத்தினார். அதுமட்டுமின்றி விஐபி தலைவர்கள் மாநிலம் தழுவிய பயணம் மேற்கொள்வர். இவர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டியதும் நம்முடைய கடமை எனச் சுட்டிக் காட்டியுள்ளார். இந்நிலையில் காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கு சீனியாரிட்டி படிநிலையில் அல்லாமல் பிற காவல்துறை அதிகாரிகளால் உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்தன.
இரண்டு கட்சிகளையும் எதிர்க்க சரியான நபர் விஜய் தான் – rama seetha pathy
சட்டம் ஒழுங்கு டிஜிபி ஆலோசனை
இதுதொடர்பாகவும் சந்தீப் ராய் ரத்தோர் தனது ஆலோசனை கூட்டத்தில் பேசினார். அதாவது, சிறப்பு யூனிட்களில் இருப்பவர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கு சம்பந்தப்பட்ட படிநிலையில் உள்ள காவல் உயர் அதிகாரிகள் மட்டுமே உத்தரவு பிறப்பிக்க முடியும். மற்ற காவல்துறை அதிகாரிகள் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது. இதுதொடர்பான விஷயங்கள் ஏதாவது அரங்கேறினால் உடனடியாக தனக்கு கண்காணிப்பு அதிகாரிகள் தகவல் தெரிவிக்க வேண்டும்.
உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
தங்கள் எல்லைக்கு உட்பட்ட சரகங்களில் இத்தகைய நிகழ்வுகள் ஏதும் நடந்தால், சிறப்பு யூனிட்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு ஆகியவற்றுக்கு தலைமை வகிக்கும் அதிகாரிகள் தனக்கு தகவல் தெரிவிப்பது அவசியம். மேலும் தங்களது அடுத்த சீனியர் காவல்துறைக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும். ஒருவேளை தகவல் தொடர்பில் ஏதாவது பிரச்சினை இருந்தாலோ, கால நேரத்தில் ஏதாவது சிக்கல் இருந்தாலோ, மெசேஜ் பிளாட்பார்ம்கள் மூலம் தகவலை பரிமாறிக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார். தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கின்றன.
தமிழகத்தில் போலீஸ் தீவிர கண்காணிப்பு
ஒருபுறம் இந்திய தேர்தல் ஆணையத்தின் பணிகளும், மறுபுறம் அரசியல் கட்சிகளின் பிரச்சாரமும் சூடு பிடித்துள்ளன. ஏற்கனவே சட்டம், ஒழுங்கு பிரச்சினை குறித்து பல்வேறு விமர்சனங்கள் எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்பட்டன. தற்போது அதிகாரம் தேர்தல் ஆணையத்தின் கைகளுக்கு மாறியுள்ளது. ஏனெனில் தேர்தலை கருத்தில் கொண்டு மிகவும் எச்சரிக்கையாக கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. தேர்தல் ஆணையம் தங்களின் வசதிக்கேற்ப அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்வர்.
அந்த வகையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக இருந்த வெங்கட்ராமனை மாற்றி விட்டு சந்தீப் ராய் ரத்தோரை புதிய டிஜிபியாக நியமனம் செய்தது. வரும் 23ஆம் தேதி வாக்குப்பதிவும், மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. அதன்பிறகு மே 6ஆம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும். இதையடுத்து புதிதாக பொறுப்பேற்கும் அரசியல் கட்சியானது தங்களுக்கு ஏற்ப அதிகாரிகளை நியமித்து கொள்ளும். அப்போது சட்டம் ஒழுங்கு டிஜிபியும் மாற்றப்படுவார் என்பது கவனிக்கத்தக்கது.
