மகாராஷ்டிரா: ‘நெருப்பு’ இல்லாமல் தினசரி 1,500 மாணவர்களுக்கு உணவு சமைக்கும் பள்ளி

காணொளிக் குறிப்பு, சிலிண்டர், நெருப்பு இல்லாமல் தினமும் 1,500 மாணவர்களுக்கு உணவு வழங்கும் பள்ளி

காணொளி: ‘நெருப்பு’ இல்லாமல் தினசரி 1,500 மாணவர்களுக்கு உணவு சமைக்கும் பள்ளி

15 நிமிடங்களுக்கு முன்னர்

மகாராஷ்டிராவின் அகோலாவில் உள்ள பிரபாத் மழலையர் பள்ளியில் சுமார் 1,500 மாணவர்களுக்கு தினமும் காலை மற்றும் மதிய உணவு வழங்கப்படுகிறது. இங்கே உணவு சமைக்க எல்பிஜி சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுவதில்லை. மாறாக ‘thermic fluid heater system’ என்கிற நெருப்பு இல்லாமல் சமைக்கும் முறை பின்பற்றப்படுகிறது.

இந்த முறையில் குறைவான நேரத்தில் அதிக அளவில் சமைக்க முடியும். இந்த முறையில் பயன்படுத்தப்படும் எண்ணெய், உணவுடன் சேர்வதில்லை.

இந்தியாவில் எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு நிலவும் இன்றைய சூழலில் இந்த பள்ளியின் சமையலறை பாதிக்கப்படவில்லை. முன்னர் தினமும் 3-இல் இருந்து 4 சிலிண்டர்கள் தேவைப்பட்டன. தற்போது இங்கே சமையலை முடிக்க வெறும் 2000 ரூபாய் மட்டுமே செலவாவதாக கூறுகின்றனர்.

இது முழுக்க முழுக்க சுற்றுச்சூழலுக்கு உகந்த செயல்முறை என்று சொல்லிவிட முடியாது. கட்டிகளை எரிக்கும்போது புகை வரவே செய்கிறது. இதிலிருந்து உற்பத்தியாகும் ஆற்றல் திறம்பட பயன்படுத்தப்படுகிறது. அதோடு பல குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவு வழங்க உதவுவதாக பள்ளி நிர்வாகத்தினர் கூறுகிறார்கள். இந்த சமையல் முறை எப்படி செயல்படுகிறது? இந்தக் காணொளியில் பார்க்கலாம்.

செய்தியாளர்: பாக்யஶ்ரீ ராவத்

ஒளிப்பதிவு: மனோஜ் ஆக்லவே

படத்தொகுப்பு: அரவிந்த் பரேகர்

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Source link