Velmurugan Complain,சிறு காரணங்களை கூறி எங்களுடைய வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படுகின்றன..திட்டமிட்டு சிலர் செயல்படுகின்றனர்:வேல்முருகன் – velmurugan complaints about his party candidates nominations cancelled without any reason

திமுக கூட்டணியில் தொடர்ந்து வந்த வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சி இம்முறை தனித்து போட்டியிட முடிவெடுத்தனர். தொகுதிப்பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாததன் காரணமாக வேல்முருகன் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக சொல்லப்பட்டது. அதன் காரணமாகவே இந்த தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக கூறி தனது கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்தார் வேல்முருகன்.

இந்நிலையில் தன் கட்சியின் வேட்பாளர்கள் பலரின் வேட்புமனு காரணமே இல்லாமல் நிராகரிக்கப்படுவதாக வேல்முருகன் குற்றம்சாட்டி வருகின்றார். தங்களின் வேட்புமனு திட்டமிட்டே நிராகரிக்கப்படுவதாக கூறினார் வேல்முருகன். இதுகுறித்து அவர் பேசுகையில், எங்கள் கட்சியின் வேட்பாளர்களின் மனுக்கள் முறையாக வழக்கறிஞரை வைத்து தேர்தல் ஆணையம் சொல்லும் விதிமுறைக்கு உட்பட்டு தயார் செய்யப்பட்டது.

வேட்புமனு நிராகரிப்பு

எந்த வகையிலும் தேர்தல் ஆணையத்தால் நிராகரிக்கப்படாத அளவிற்கு வேட்புமனுக்களை தயார் செய்திருந்தோம். அதன்படி வேட்புமனுக்களை தாக்கல் செய்தோம். மேலும் வேட்புமனு தாக்கல் செய்யும் ஒவ்வொரு நாளும், ஏதேனும் திருத்தும் செய்ய வேண்டுமா ? வேட்புமனு சரியாக உள்ளதா ? என கேட்டுக்கொண்டு தான் இருந்தோம். அதற்கு தேர்தல் நடத்தும் அதிகாரிகள், எல்லாம் சரியாக இருப்பதாக கூறினார்கள். ஆனால் நேற்று மட்டும் ஒரு வேட்புமனுவில் ஒரு சீல் இல்லை என கூறி அனுப்பினார்கள்.

அந்த சேலையும் பெற்றுக்கொண்டு சென்றால் அந்த வேட்புமனுவை வாங்க மறுத்துவிட்டார்கள். இன்றும் எங்களுடைய சில வேட்புமனுக்களை அவர்கள் வாங்க மறுத்து வருகின்றனர். இதெல்லாம் சிசிடிவி காட்சிகளில் பதிவாகி இருக்கின்றது.தேர்தல் நடத்துபவர்கள் முக்கியமான சில காரணங்கள் இல்லையென்றால் தான் வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும். ஆனால் இதுபோன்ற சில திருத்தங்கள் கொண்ட வேட்புமனுக்களை நிராகரிக்காமல் வேட்புமனுவை ஏற்க வேண்டும். இதுதான் இந்தியா முழுவதும் கடைபிடிக்கப்படும் விதியாகும்.

ஆனால் இன்று திட்டமிட்டு எங்களுடைய சில வேட்புமனுக்களை நிராகரிக்கப்படுகின்றன. குறிப்பாக ஆளும் கட்சிக்கு சிம்மசொப்பனமாக இருக்கும் தொகுதிகளில் எங்களுடைய வேட்பாளர்களின் வேட்புமனுக்களை நிராகரிக்கப்படுகின்றன. திருப்போரூர், ஓசூர், சிதம்பரம் போன்ற பத்து தொகுதிகளுக்கு மேல் எங்களிடையே வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. வினோதமான காரணங்களை கூறியும் காரணமே இல்லாமலும் எங்களுடைய வேட்புமனு நிராகரிக்கப்படுகின்றன.

வேல்முருகன் குற்றச்சாட்டு

நான் தேர்தல் தலைமை அதிகாரிகளை சந்தித்து வேண்டுகோள் வைத்து வருகின்றேன். ஜனநாயக கடமையை செய்யக்கோரி வேண்டுகோள் வைக்கின்றேன். நிராகரிக்கப்பட்ட சில வேட்புமனுக்களை சரி செய்து கொடுக்கும்போது அதனை அவர்கள் பெற மறுக்கின்றார்கள். இதெல்லாம் ஏன் என புரியவில்லை. இதெல்லாம் திட்டமிட்டு செய்து வருகின்றனர். எங்களுக்கு வெற்றிவாய்ப்பு உள்ள வேட்புமனுக்களை நிராகரிக்கப்படுகின்றன.

இவ்வாறு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் குற்றம்சாட்டி வருகின்றார். இந்நிலையில் தங்களின் வேட்புமனுக்களை நிராகரிக்கப்படுவதற்கு பின்னால் ஒரு காரணம் இருப்பதாக வேல்முருகன் சொல்கின்றார். குறிப்பாக ஆளும்கட்சிக்கு ஆதரவாக சிலர் செயல்படுகின்றனர். அதன் காரணமாக தான் வேண்டுமென்றே எங்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படுவதாக வேல்முருகன் குற்றம்சாட்டி வருகின்றனர்.

திட்டமிட்டு செயல்படுகின்றனர்

குறிப்பாக அவர்களுடைய வெற்றிவாய்ப்பு அதிகமாக உள்ள தொகுதிகளின் வேட்புமனுக்கள் திட்டமிட்டு நிராகரிக்கப்படுவதாக சொல்கின்றார் வேல்முருகன். ஆனால் தேர்தலை பொறுத்தவரை அனைத்துமே தேர்தல் ஆணையத்தின் முடிவு தான். தேர்தல் ஆணையம் தான் அனைத்திற்கும் பொறுப்பேற்று தேர்தலை நடத்தி வருகின்றனர். அப்படி இருக்கையில் ஆளும் கட்சிக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதே திமுக ஆதரவாளர்களின் வாதமாக இருந்து வருகின்றது.

அதே சமயம் எதிர்கட்சிகளை சேர்ந்தவர்கள் சிலர், திமுக வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் மட்டும் எந்த பிரச்சனையும் இல்லாமல் ஏற்கப்படுவதாகவும் அவர்கள் கூறி வருகின்றனர். இவ்வாறு வேட்புமனு ஏற்பு மற்றும் நிராகரிப்பில் பல சர்ச்சைகள் எழுந்துள்ளன. இருப்பினும் வேல்முருகன் தொடர்ந்து வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்காக போராடி வருவதால் கண்டிப்பாக நிராகரிக்கப்பட்ட மனுக்கள் இறுதியில் ஏற்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

Source link