இந்த சூழலில் தான் இரண்டு தினங்களுக்குள் ஹர்மோஸ் ஜலசந்தியை திறக்காவிட்டால் ஈரானின் ‘உட் கட்டமைப்புகள்’ சிதைக்கப்படும் எனவும் ஈரான் முழுமையாக அழிக்கப்படும் எனவும் அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார். ஆனால் அமெரிக்காவின் எச்சரிக்கைகளை ஈரான் “கற்பனை” என விமர்சித்து வருகிறது. மேலும் தொடர்ந்து தனது பதிலடி தாக்குதலை நீட்டித்து வருகிறது.
இந்த காலக்கெடு முடிவதற்குள்ளாகவே இஸ்ரேல் ராணுவம் ஈரான் மக்கள் ரயில் நிலையங்களுக்கு செல்ல வேண்டாம் எனவும் ரயில் பயணத்தை தவிர்க்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தது. ஈரானுக்கு அமெரிக்கா கொடுத்த கெடு முடிவதற்கு முன்னதாகவே ஈரானின் உட்கட்டமைப்பான, ரயில் நிலையங்களை தாக்க அச்சுறுத்தல் விடுத்திருப்பது மேலும் அந்த பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்கள் குறிவைக்கப்பட்டுள்ளனர்
அல் ஜஸீரா உள்ளிட்ட ஊடகங்களின் தரவுகளின் அடிப்படையில் ஈரான் முழுவதும் அமெரிக்க இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்கள் தீவிரபிபடுத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் கல்வி நிலையங்கள், எண்ணெய் ஆலைகள், பொதுமக்கள் அதிகம் இருக்கக்கூடிய இடங்கள் குறிவிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் ஈரானிய ஏவுகணைகள் மற்றும் ஆளில்லாத விமானங்கள் வளைகுடா பிராந்தியங்கள் மற்றும் வளைகுடா பிராந்தியங்களில் இருக்கக்கூடிய அமெரிக்க தளவாடங்களையும் குறி வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
அணு உலைகளை குறி வைக்கும் இஸ்ரேல்
தெஹ்ரானில் உள்ள மூன்று விமான நிலையங்களின் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் பல ஈரானிய விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை தாக்கி அழைத்துள்ளதாகவும் தெரிவித்திருக்கிறது. மேலும் உலகின் மிகப்பெரிய எரிவாயு இருப்பான தெற்கு பார்ஸ் பகுதியில் இருக்கும் பெட்ரோ கெமிக்கல் தளவாடத்தின் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.
மேலும் இஸ்ரேல் ஈரானின் புஷேர் அணுமின் நிலையத்திற்கு அருகில் உள்ள இடங்களிலும் தாக்குதல் நடத்தியிருக்கிறது. இதன் மூலம் அணுசக்தி பாதிப்பு ஏற்படலாம் என ஐநா அணுசக்தி கண்காணிப்பு அமைப்பின் தலைவர் வருத்தம் தெரிவித்திருக்கிறார். மேலும் இது மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்பதால் இந்த நடவடிக்கைகளை உடனே நிறுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்திருக்கிறார்.
அதிகாலை தாக்குதல்
இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் புரட்சிகர காவல் படையும் உளவுத்துறை தலைவர் மேஜர் ஜெனரல் மஜீத் காதிமி கொல்லப்பட்டதாக தகவல்கள் வழியாக இருக்கின்றன. அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானின் மக்களின் வாழ்வியலை அழிக்க எண்ணுகிறது என ஈரான் குற்றம் சாட்டியிருக்கிறது.
இந்தியாவின் முன்னெடுப்பு
இந்த சூழலில் தான் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கத்தார் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷேக் முகமது பின் அப்துல் ரகுமான் யாசின் அல்தானி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர், அப்துல்லா பின் சையத் அல் நஹ்யான் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்.
இதில் மேற்காசிய பகுதியில் நிலவும் பதற்றமான சூழல் குறித்து பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அப்போது பிரச்சினைகளை அமைதியாக பேசி தீர்க்க வேண்டும் எனவும் உலக வர்த்தகம் மற்றும் எரிசக்தி விநியோகத்திற்கு முக்கியமான கடல் போக்குவரத்து சுதந்திரத்தை உறுதி செய்ய வேண்டும் எனவும் உரையாடப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
