காங்கிரஸ் தலைமையிலான அரசு வந்தால், மாநிலங்களுக்கு ‘ஆப்ஷன்’ வழங்கலாம். காங்கிரஸ் கட்சி இந்தக் கருத்தை கொண்டு வந்தது; அதை அமல்படுத்தியது பாஜக. ஆரம்பத்தில், மாநிலங்கள் நீட் வேண்டும் அல்லது வேண்டாம் என்று தீர்மானிக்கலாம் என்ற நிலை இருந்தது. அதை மாற்றியது பாஜக தான்” என்றார்.இந்த ஆண்டு 26 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர், அதை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு, டாக்டராக ஆக வேண்டும் என்றால் தற்போது அந்த வழியாகத்தான் செல்ல வேண்டும்.
டென்ஷன் ஆகும் திமுக ஆதரவாளர்கள்! காரணம் காங்கிரஸ்?
தேர்தல் கமிஷன் முன் வேட்புமனு தாக்கல் செய்தால், அதே கமிஷனை முன்னிட்டு தேர்தலை சந்திக்க வேண்டியது போல, இன்று மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்காக நீட் தேர்வு அவசியமாகியுள்ளது.
அதற்காகத்தான் தமிழ்நாடு அரசு நீட் தேர்வை எதிர்த்தாலும், நீட் கோச்சிங் வழங்கி வருகிறது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடும் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம்” என்றார்.
காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் குறித்து மேலூரில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பான கேள்விக்கு, நாங்கள் 28 பேர் மட்டுமே இருக்கிறோம்; அந்த 28 பேரையும் திருப்திப்படுத்த முடியும். 29வது நபருக்கு வருத்தம் இருக்கலாம். அதேபோல் திமுகவில் 175 பேர் போட்டியிடுகின்றனர் என்றால், 176வது நபருக்கு வருத்தம் இருக்கும். எதிர்பார்ப்புகள் எல்லாம் ஒரு வரம்புக்குள் இருக்க வேண்டும்” என்றார்.
சீமானை வெளியூர் வேட்பாளர் என்று கூறியதற்கு விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு? நான் வெளியூர் வேட்பாளர் என்று சீமானை கூறும்போது, உள்ளூரில் நல்ல வேட்பாளர் இருக்கிறார் என்ற வாதத்தையே முன்வைக்கிறேன். அந்த வாதத்தை அந்த ஊரிலேயே வலுப்படுத்தச் சொல்லுங்கள்.சீமான் 2016-ல் கடலூரில் போட்டியிட்டார், 2012-ல் திருவொற்றியூரில் போட்டியிட்டார், தற்போது காரைக்குடியில் நிற்கிறார். 2031-ல் எந்த ஊரில் போட்டியிடுவார் என்பது தெரியவில்லை. உள்ளூரில் நாங்கள் நல்ல வேட்பாளரை வைத்துள்ளோம் என்பதே எங்கள் வாதம்.
நாம் தமிழர் கட்சியைப் பொறுத்தவரை, ஒவ்வொரு தேர்தலிலும் புதிய வேட்பாளர்கள் நிறுத்தப்படுகின்றனர். நான் போட்டியிட்டபோதும் எழிலரசி என்ற வேட்பாளரை நிறுத்தினர்; அவரை நான் வாக்கு எண்ணும் நாளில்தான் பார்த்தேன். அதன்பின் நல்லது கெட்டது கூட அவர்களை பார்க்கவில்லை
ஊருடன் தொடர்பு கொண்டவர்களே தேர்தலுக்கு அப்பாற்பட்ட காலத்திலும் மக்களுடன் உறவு வைத்திருப்பார்கள். சீமானுக்கு காரைக்குடியுடன் தொடர்பு இல்லை என்பதையே நான் வலியுறுத்துகிறேன்” என்றார்.
காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் சி.ஆர். சுந்தராஜன் ராஜினாமா குறித்து, “அது வருத்தமான விஷயம். அவரது ராஜினாமாவை ஏற்கவில்லை” என்றார். தேர்தல் நேரத்தில் அதிமுக, திமுக இடையே தரம் தாழ்ந்த விமர்சனம் குறித்து, “அதை நான் கவனிக்கவில்லை. கடுமையான சொற்களை பயன்படுத்துவதற்கு பதிலாக கொள்கைகளை முன்வைத்து வாதிட வேண்டும். அரசியலில் நகைச்சுவையும் அதிகமாக இருக்க வேண்டும் என்பது என் கருத்து” என்றார்.
