காணொளி: ஆர்டெமிஸ் 2 குழு எடுத்த பூமியின் படங்கள்

காணொளிக் குறிப்பு, ஆர்டெமிஸ் 2 குழு எடுத்த பூமியின் படங்கள்

காணொளி: ஆர்டெமிஸ் 2 குழு எடுத்த பூமியின் படங்கள்

4 ஏப்ரல் 2026

நிலாவைச் சுற்றி பயணம் செய்து கொண்டிருக்கும் ஆர்டெமிஸ் 2 குழு எடுத்த பூமியின் படங்களை நாசா வெளியிட்டுள்ளது.

அதில் ஒரு படத்திற்கு “ஹலோ வேர்ல்ட்” (Hello, World) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் அட்லாண்டிக் பெருங்கடல் நீல நிறத்தில் விரிந்திருப்பது தெரிகிறது. பூமி சூரியனை மறைக்கும் போது, அதன் சுற்றில் மெல்லிய ஒளி வளையம் போல காட்சியளிக்கிறது.

மேலும், இரு துருவங்களிலும் பச்சை நிற துருவ ஒளியும் தெரிகிறது. மேலும் ஒரு படம் ஆர்டெமிஸ் 2 லுக்கிங் பேக் அட் எர்த் (“Artemis II Looking Back at Earth) என அழைக்கப்படுகிறது. இது ஓரியன் (Orion) விண்கலத்தின் முக்கிய ஜன்னல் ஒன்றில் இருந்து எடுக்கப்பட்டது.

மற்றுமொரு படத்தில் பூமியில் இரவும் பகலும் பிரியும் கோடு காணப்படுகிறது. அந்த கோடு “டெர்மினேட்டர் (terminator)” என்று அழைக்கப்படுகிறது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Source link