தேவேந்திர பட்னாவிஸ்
இதனிடையில் அண்மையில் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியான நிலையில், நேற்றைய தினம் பெரும்பாலானோர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். அந்த வகையில் மதுரை தெற்கு தொகுதி வேட்பாளர் ராம சீனிவாசன், மகராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் முன்னிலையில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து பட்னாவிஸ் பேசுகையில், தேர்தலில் ராம சீனிவாசன் வெற்றி பெற்று பிரதமரை அணுகினால் மதுரைக்கு மெட்ரோ திட்டம் வரும் என தெரிவித்து இருந்தார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம்
அவருடைய இந்த பேச்சுக்கு திமுகவினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். எங்க கட்சி வேட்பாளருக்கு ஓட்டு போட்டால் தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய நிதியை கொடுப்போம் என்று எப்படி பட்னாவிஸ் பேசலாம் என எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக முதலவர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், பாஜக வேட்பாளரை தேர்ந்தெடுத்தல் மட்டுமே மதுரைக்கு மெட்ரோ கொண்டு வருவோம் என்று பேரம் பேசுவதும், மிரட்டுவதும் மட்டும்தான் மகாரஷ்டிர முதல்வருடைய வேலையா?
அரசியலைப்பு சட்டத்தின் படி உறுதிமொழி ஏற்ற முதலமைச்சர் ஒருவர், எதிர்க்கட்சி ஆளும் மாநிலத்தில் வந்து இவ்வாறு பேசுவதற்கு வெட்கப்பட வேண்டும். ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீட்டில் புறக்கணித்தும் தமிழ்நாடு அரசு நிறைவேற்றிவுள்ள சாதனை திட்டங்கள் பற்றி அவருக்கு தெரியுமா? திராவிட மாடல் ஆளும் தமிழ்நாட்டில் தான் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது. இவ்வாறு தன்னுடைய பதிவில் குறிப்பிட்டு இருந்தார்.
வெளிப்படையான மிரட்டல்
இந்நிலையில் தேவேந்திர பட்னாவிஸ் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து திமுக எம்பிக்கள் தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி வீராசாமி செய்தியாளர்களை சந்திந்துள்ளனர். அப்போது அவர்கள் பேசுகையில், மதுரை – கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்காக அனைத்து முயற்சிகளையும் திராவிட மாடல் அரசு முன்னெடுத்தது. கொள்கை வழிகாட்டுதல், சாத்தியக்கூறு அறிக்கை, அறிக்கைக்காக ஒப்புதல் அனைத்தும் முதல்வரால் வழங்கப்பட்டது. இதை அனைத்தையும் புறம்தள்ளி விட்டு, நாங்கள் அறிவித்த எங்களுடைய உறுப்பினரை தேர்வு செய்தால் மதுரை – கோவை மெட்ரோ திட்டத்தை செயல்படுத்துவோம் என்று சொல்வது அப்பாட்டமான பிளாக்மெயிலுக்கு ஈடானது.
தமிழ்நாட்டை உதாசீனம் செய்கிறார்கள்
அப்படியென்றால் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட எங்கள் முதல்வர் அனைத்தையும் செய்துள்ளார். அதனை எதற்காக நீங்க தடுத்தி நிறுத்தி இருக்கிறீர்கள். இங்கே மக்கள் தொகை குறைவாக இருக்கு என சொல்லி விட்டு ஆக்ராவில் மெட்ரோவுக்கான பணிகளை துவங்குகிறீர்கள். இரட்டை நிலைப்பாட்டை வைத்துக்கொண்டு தமிழ்நாடு, தமிழக மக்களை உதாசீனம் செய்கிறீர்கள். மகராஷ்டிரா முதல்வர் இங்கு வந்து இதை சொல்வதற்கான அரசியல் பின்புலத்தை நான் அனைவரும் உணர வேண்டும்.
கீழடி – நாக்பூருக்கு இடையிலான மோதல்
இதனால் தான் இந்த தேர்தல் டெல்லிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையிலான தேர்தல் என்கிறோம். இதே பட்னாவிஸ் துணை முதல்வராக இருந்த காலத்தில் குஜராத்துக்கு, மகராஷ்டிரா மாநிலத்துக்கு வர வேண்டிய பல முதலீடுகளை மாற்றி விட்டார். அவர் மதுரைக்கு மெட்ரோ திட்டத்தை கொண்டு வருவோம் என பேசுவது ஏற்கத்தக்கது கிடையாது. நாக்பூர், கீழடிக்கும் இடையிலான மோதல் தான் இது. இவ்வாறு தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி வீராசாமி இருவரும் பேசியுள்ளனர்.
