நிச்சயதார்த்தம் முடிந்தது… கல்யாணம் எப்போது? தேதியை குறித்துக் கொடுத்த மு.க.ஸ்டாலின் சொன்ன கருத்துக்கள் தற்போது வைரலாகி வருகிறது.
நிச்சயதார்த்தம் vs திருமணம்
தனது உரையில் முதல்வர் குறிப்பிட்டதாவது: திமுகவின் தேர்தல் அறிக்கை என்பது வெறும் காகிதமல்ல, அது மக்களின் வாழ்வாதாரத்திற்கான உறுதிமொழி. நாம் தேர்தல் அறிக்கை வெளியிட்ட அந்த நாள்தான் நமது வெற்றிக்கான நிச்சயதார்த்த நாள். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4-ஆம் தேதி, அந்த வெற்றியைக் கொண்டாடும் நமது ‘கல்யாண நாள்’ எனக் குறிப்பிட்டார்.
மக்களின் நம்பிக்கையே பலம்
திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள இல்லத்தரசி திட்டம் மற்றும் மகளிருக்கான உதவித்தொகை உயர்வு போன்ற அம்சங்கள் ஏற்கனவே மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. மார்ச் 29 அன்று வெளியிடப்பட்ட இந்த அறிக்கை, தேர்தலுக்கு முன்பே திமுகவின் வெற்றியை உறுதி செய்துவிட்டதாக அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
சீர்காழியின் மாப்பிள்ளை நான்
மற்றவர்களுக்கு தான் நான் முதலமைச்சர்; சீா்காழியை பொறுத்தவரை நான் உங்கள் வீட்டு மாப்பிள்ளை. சீர்காழியில் பொண்ணு எடுத்த மருமகனாக வாக்கு கேட்டு வந்துள்ளேன். என்ன தான் உங்கள் ஊா் மருமகனாக இருந்தாலும் வெறும் கைகளுடன் வரவில்லை. ஏராளமான திட்டங்களை நிறைவேற்றிக் கொடுத்த நம்பிக்கையில் வாக்கு கேட்டு வந்துள்ளேன் என ஸ்டாரின் நெகிழ்ச்சியாக பேசினார்.
எடப்பாடி பழனிசாமி மீது ஸ்டாலின் விமர்சனம்
கூவத்தூாில் எம்எல்ஏக்களை ஏலம் எடுத்து பதவிக்கு வந்தவா் எடப்பாடி பழனிசாமி. ஒருவேளை அவர் தமிழகத்தை ஆண்டிருந்தால், மாநிலத்தை கூறுபோட்டு விற்றிருப்பார். 2026 தோ்தல் முடிவுகள் பழனிச்சாமி என்ற அசிங்கத்தை துடைத்தெறியும் ஒரு தொகுதியில் கூட இவர்கள் வெற்றிபெற கூடாது என ஸ்டாலின் தெரிவித்தார். வரும் தேர்தலில் பழனிசாமியும், என்டிஏ கூட்டணியும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறக்கூடாது.
அதிமுகவையும் பழனிசாமியையும் குத்தகைக்கெடுத்திருப்பது யாரென்றால் பாஜக. அதாவது டெல்லி டீம். அந்த டீமிலிருந்து இப்போது அடிக்கடி ஒன்றிய அமைச்சர்களும் பாஜக முதலமைச்சர்களும் தமிழ்நாட்டிற்கு படையெடுத்து வருகிறார்கள். அவர்களிடன் நான் கேட்கும் கேள்விகளுக்கும், நான் விட்ட சவால்களுக்கும் பதில் இருக்கிறதா? என அவர் கேள்வி எழுப்பினார்.
Content இல்லாமல் பேசுப் எடப்பாடி
எந்த Content-ம் இல்லாமல் கண்டதையும் பேசும் எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி வலம் வருகிறார். நாள்தோறும் வரும் கருத்துக்கணிப்பு முடிவுகளில், திமுகவின் வெற்றி எண்ணிக்கை கூட கூட, தோல்வி பயத்தால் பழனிசாமியின் தரம் கீழே செல்கிறது என முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
