உலகிலேயே மிகவும் தூய்மையான குடிநீர் உள்ள நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் இந் தியா எத்தனையாவது இடம் பிடித்துள்ளது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
நீரின் தரத்தை மேம்படுத்தும் நாடுகள்
நீரின் தரத்தை உயர்வாக வைத்திருக்க பல நாடுகள் மேம்பட்ட தொழில்நுட்பங்களையும் திறமையான பல மேலாண்மையும் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக நீர் எடுக்கும் இடத்திலிருந்து வீடுகளுக்கு எடுத்து செல்லும் வரை ஒவ்வொரு கட்டத்திலும் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது இயற்கை நீர் வளங்களை பாதுகாப்பதுடன் நவீன சுத்திகரிப்பு முறைகளையும் பயன்படுத்துவதால் நீரின் தரம் தொடர்ந்து உயர்ந்த நிலையில் தக்க வைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
தூய்மையான குடிநீர் உள்ள நாடுகள் பட்டியல்
இந்த நிலையில், உலக அளவில் நீரின் தரும் பெரிய வேறுபாடுகளை கொண்டுள்ளது. குறிப்பாக பல்வேறு உலக நாடுகளின் கட்டமைப்பு வசதிகள் சுற்றுச்சூழல் விதிமுறைகள் மற்றும் பொது சுகாதார அமைப்பு செயல் திறனை பொறுத்து அமைகிறது. இந்த நிலையில் சமீபத்தில் Heath Metrics And Evaluation என்ற நிறுவனம் ஆய்வு நடத்தியது.இதில் தூய்மையான குடிநீர் உள்ள நாடுகள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
முதலிடத்தில் பின்லாந்து
அதன்படி, 100 மதிப்பெண்களுடன் பின்லாந்து முதலிடத்தில் உள்ளது.2 வது இடத்தில் ஜெர்மனி, 3 வது இடத்தில் கிரீஸ், 4வது இடத்தில் அயர்லாந்து, 5வது இடத்தில் இத்தாலி, 6வது இடத்தில் சுவிட்சர்லாந்து, 7 வது ஐக்கிர அரபு அமீரகம், 8வது இடத்தில் அமெரிக்க ஐக்கிய நாடுகள் 100 மதிப்பெண்களுடன் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.
இந்தியா எத்தையாவது இடம்?
மேலும் நார்வே 99.9 மதிப்பெண்களுடன் தூய்மையான குடிநீர் உள்ள நாடுகள் பட்டியலில் 9 வது இடத்தில் உள்ளது. 10 வது இடத்தில் லக்சம்பர்க99.8 மதிப்பெண்களுடன் உள்ளது.இந்த பட்டியலில் இந்தியா 25 மதிப்பெண்களுடன் 144-ஆவது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.சமீபத்தில் வட இந் தியாவில் குடிநீர் குடித்து பொதுமக்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
குடிநீர்தரத்தை எவ்வாறு மதிப்பிடபடுகிறது?
தூய்மையான குடிநீர்தரத்தை உலகளவில் மதிப்பிட ‘சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு’ (EPI) முக்கியமானதாகும். இதில் பாதுகாப்பான குடிநீர், சுகாதார வசதிகள் உள்ளிட்ட பல அம்சங்கள் கணக்கில் கொள்ளப்படுகின்றன. குறிப்பாக, நீர் தொடர்பான பாதிப்புகளால் மக்கள் உடல்நலத்தில் ஏற்படும் இழப்புகளை (DALYs) அடிப்படையாக கொண்டு மதிப்பெண் வழங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
