சென்னை டி நகர் ராஜா தெருவில் வசித்து வரும் இவர் பாரதிய வித்யா பவனில் நடைபெற்ற ஆன்மீக சொற்பொழிவில் பேசும் போது அம்பேத்கர் குறித்தும் திருவள்ளுவர் குறித்தும் மேலும் தளர் சமூகத்தினர் குறித்தும் இழிவாக பேசினார்.
இவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகவே இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. தொடர்ந்து இவர் மீது மாம்பழம் காவல் நிலையத்தில் சென்னை சூளையை சேர்ந்த செல்வம் என்பவர் புகார் அளித்திருந்தார் அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணை முடிவில் ஆர்பிவிஎஸ் மணியன் மீது வன்கொடுமை பிரிவு உட்பட எட்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகவே இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. தொடர்ந்து இவர் மீது மாம்பழம் காவல் நிலையத்தில் சென்னை சூளையை சேர்ந்த செல்வம் என்பவர் புகார் அளித்திருந்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணை முடிவில் ஆர் பி வி எஸ் மணியன் மீது எட்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன், குற்றம்சாட்டப்பட்ட மணியன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என கூறி, அவரை வழக்கிலிருந்து விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.
என்ன பேசினார் மணியன்?
ஆன்மீக பேச்சாளரான மணியன், அரசியலமைப்பு சட்டத்தை இயற்றிய அண்ணல் அம்பேத்கர் ‘அரசியலமைப்பை இயற்றியதில், அம்பேத்கருக்கு எந்த பங்கும் இல்லை எனவும், அவர் அங்கு கிளர்க்காக வேலை பார்த்ததாகவும் பேசினார், மேலும் அம்பேத்கர் சுயமாக எதையும் செய்யவில்லை என பேசிய அவர், பட்டியல் இன மக்கள் குறித்தும் இழிவாக பேசியது பெரும் சர்ச்சையாகியது.
மேலும் அன்றைய தினம் அவர் பேசுகையில் திருவள்ளுவருக்கு யார் அந்த பெயரை வைத்தது எனவும் திருவள்ளுவர் தான் திருக்குறளை எழுதினார் என்பதற்கு ஆதாரம் உண்டா எனவும் பல அபத்தமான கேள்விகளை எழுப்பி இருந்தார். இவரின் இந்த கருத்துக்கு பல்வேறு தலித் அமைப்புகள் மற்றும் இயக்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன . விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மணியன் பேசியதற்கு மன்னிப்பு கூற வேண்டும் எனவும் அவர் பேசியது மிகவும் அபத்தமான கருத்து எனவும் கடுமையாக விமர்சித்து இருந்தார்.
இந்த சூழலில் தான் இன்றைய தினம் குற்றம்சாட்டப்பட்ட மணியன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என கூறி சென்னை உயர் நீதிமன்றத்தால் அவர் விடுதலை செய்யப்பட்டு உள்ளார்.
