மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.. 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை..! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

தமிழ்நாட்டில் மொத்தம் 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.. மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. தேர்தல் தேதி நெருங்கும் நிலையில் அரசியல் களம் நாளுக்கு நாள் அனல் பறந்து வருகிறது. இந்த சூழலில் தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் 6-ம் தேதியுடன் நிறைவடைந்தது..

இந்த தேர்தலுக்காக சுமார் 7500 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.. மேலும் வேட்புமனுக்கள் பரிசீலனை நேற்று நடைபெற்றது.. இதில் பெரும்பாலான வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.. எனினும் சரியாக பூர்த்தி செய்யப்படாத வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.. வேட்பு மனுவை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் ஏப்ரல் 9-ம் தேதி ஆகும்.. அதன்பின்னரே தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் மொத்தம் எத்தனை வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர் என்பது தெரியவரும்..

2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.. மேலும் இந்த தேர்தலில் விஜய்யின் தவெகவும் களமிறங்கி உள்ளது.. விஜய் யாருடைய வாக்குகளை பிரிப்பார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட உள்ளன.. அதன்படி வாக்குப்பதிவுக்கு 2 நாட்களுக்கு முன்னதாக 21-ம் தேதி முதல் வாக்குப்பதிவு நடைபெறும் 23-ம் தேதி வரை 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்.. அதே போல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4-ம் தேதியும் டாஸ்மாக் கடைகள் இயங்காது.. எனவே தேர்தலை ஒட்டி தமிழ்நாட்டில் மொத்தம் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Read More : “ஐசியூவில் இருந்த தேமுதிகவை நாம் தான் காப்பாற்றினோம்.. ஆனா..” மீண்டும் பிரேமலதாவை சீண்டிய இபிஎஸ்..!


Next Post

Wed Apr 8 , 2026

மேற்கு ஆசியாவில் நிலவி வரும் பதற்றங்கள் காரணமாக கேஸ் சிலிண்டர் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தொடர் நெருக்கடிகளின் பின்னணியில், மத்திய அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. நகரங்களில் வசிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், 5 கிலோ எடையுள்ள சிறிய எல்பிஜி (LPG) சிலிண்டர்களின் விற்பனையும் இருப்பும் நாடு முழுவதும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், புலம்பெயர் தொழிலாளர்களுக்குப் பெரும் நிவாரணம் அளிக்கும் வகையிலும் அரசு ஒரு முடிவை எடுத்துள்ளது. […]

5KG GAS CYLINDER 1 1

Source link