2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ராயபுரம் சட்டமன்ற தொகுதி அனல் பறக்கும் போட்டிகளமாக மாறியுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ராயபுரம் சட்டமன்ற தொகுதி
ராயபுரம் பகுதி சென்னை மாநகரின் வரலாற்று சிறப்புமிக்க பகுதி. குறிப்பாக வணிக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக கருதப்படுகிறது. 1977 முதல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களை பார்க்கும்போது, இந்த தொகுதி அதிமுக ஏழுமுறையும், திமுக நான்கு முறை வெற்றி பெற்றுள்ளது. நீண்ட காலமாக அதிமுகவின் பலமான கோட்டையாக இந்த தொகுதி இருந்து வருகிறது.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் மாற்றத்தை கண்டது அப்போது திமுக சார்பில் போட்டியிட்ட ரா. மூர்த்தி வெற்றி பெற்றார். இந்த நிலையில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள 2026க்கான சட்டமன்றத் தேர்தலில் ராயபுரம் தொகுதியில் பல முக்கிய வேட்பாளர்கள் நேருக்கு நேர் மோதுகின்றன. திமுக சார்பில் டாக்டர் ஏ. சுபைர் கான் களமிறங்கியுள்ளார். இவர் முன்னாள் மத்திய அமைச்சர் எ. ரகுமான்கான் அவர்களின் மகன் ஆவார்.
டென்ஷன் ஆகும் திமுக ஆதரவாளர்கள்! காரணம் காங்கிரஸ்?
அதிமுகவின் மீண்டும் டி. ஜெயகுமார் போட்டி
அதிமுக சார்பில் பி ஜெயக்குமார் மீண்டும் போட்டியிடுக்கிறார். இவர் ஐந்து முறை எம்எல்ஏ மற்றும் அமைச்சராக பணியாற்றிய அனுபவம் உண்டு. தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கே வி விஜயதாமு களமிறக்கப்பட்டுள்ளார். இந்த தொகுதியில் விஜய்க்கு ஆதரவு இவருக்கு பலமாக இருக்கும் என்று கருதப்படுகிறது .மேலும் நாம் தமிழர் கட்சி சார்பில் பாபு மைலனும் போட்டியிட உள்ளார். இதனால் தேர்தல் காலம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.
வாக்காளர் தரவு 2026
முந்தைய தேர்தல் முடிவுகள் குறித்து சற்று விரிவாக பார்க்கலாம். கடந்த 2021 திமுக 53 சதவீத வாக்குகள் பெற்றது. குறிப்பாக 27 ஆயிரத்து 779 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதே நேரத்தில் அதிமுக 30.40% வாக்குகள் மட்டுமே பெற்றது ஆனால் 2016ல் ஜெயக்குமார் 831 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடுத்தக்கது. இந்த முறை வாக்கு சதவீதங்களில் பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதுக்கு காரணம் விஜயின் அரசியல் வருகை. இந்த முறை முடிவை கணிக்க முடியாத சிக்கலாக உள்ளது.தற்போது ராயபுரம் தொகுதியை பொருத்தவரை மொத்தம் ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 931 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 75 ஆயிரத்து 870 ஆண்களும் 81,004 பெண்களும் உள்ளனர். மேலும் 57 பேர் மூன்றாவது பாலிடத்தவர்கள் உள்ளனர்.
வெற்றி வாய்ப்பு கணிக்க முடியாத நிலை?
தற்போதைய நிலவரப்படி, திமுக புதிய முகத்தை முன்வைத்து சிறுபான்மையினர் மற்றும் இளைஞர்களின் ஆதரவை ஈர்க்க முயற்சி செய்கிறது அதிமுகவை சேர்ந்த ஜெயக்குமார் அனுபவதையும் பாரம்பரிய வாக்கு வங்கியையும் நம்புகிறது .மற்றொரு புறம் தமிழக வெற்றிக்கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி பெரும் வாக்குகள் முடிவை தீர்மானிக்கும் வகையில் பாதிப்பை ஏற்படுத்த கூடும். இதனால் ராயபுரம் தொகுதி இந்த தேர்தலில் கடும் போட்டி நிலவுக்கு என்ற முக்கிய தொகுதியாக மாறியுள்ளது.
