தேனி மாவட்டம் போடியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேசுகையில், “தமிழகம் முழுவதும் உள்ள திமுக கூட்டணி வேட்பாளகள் இந்த தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவார்கள். இந்த தொகுதியில் நான் 3 முறை வெற்றி பெற்றுள்ளேன்.. நான் மக்களுக்கு கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளேன். இந்த முறையும் மக்கள் என்னை வெற்றி பெற வைப்பார்கள் என்றார்.
அதிமுகவில் இருந்து விலகியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “அதிமுகவில் இருந்து நான் எங்கே போனேன்.. அவர்கள் தான் என்னை விரட்டிட்டாங்க.. தண்ணீர் பாட்டிலை வீசி என்னை வெளியே அனுப்பிட்டாங்க என்றார். மேலும் இபிஎஸ் தவறான வழியில் சென்று கொண்டிருக்கிறார். அவரை முதல்வராக நியமனம் செய்தது சசிகலா.. ஆனால் அவரையே சூரியனை பார்த்து ஏதோ குரைக்கிறது என ஒருமையில் சொன்னார். நன்றி உணர்வே இல்லாத மனிதன் தான் இபிஎஸ் என்றார்.
தொடர்ந்து 50 ஆண்டு கால அரசியல் அனுபவம் இருக்கிறது. 25 ஆண்டுகள் சட்ட மன்ற உறுபினராக இருந்திருக்கேன், 5 ஆண்டுகள் நகர்மன்ற தலைவர் என பல பதவிகளில் இருந்திருக்கிறேன். பொறுப்பேற்ற பதவிக்கு ஏற்ப கடமையை செய்து மன நிறைவோடு வாழ்ந்து வருகிறேன் என பேசினார்.
