நடைப்பயிற்சி செய்தால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா..?

இருப்பதிலேயே எளிமையானதும், எவராலும் செய்யக்கூடியதும் நடைப்பயிற்சிதான். எந்த சிறப்பு உபகரணமும் தேவையில்லாமல், தினமும் சிறிது நேரம் நடப்பதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை மிகுந்த அளவில் மேம்படுத்தலாம். குறிப்பாக எடை குறைப்புக்காக பலரும் நடைப்பயிற்சியை தேர்வு செய்கிறார்கள். ஆனால் இதன் நன்மைகள் அதைவிடவும் அதிகம்.

நடைப்பயிற்சியின் 7 முக்கியமான நன்மைகள்:

இதய நலன்: நடைப்பயிற்சி ஒரு சிறந்த ஏரோபிக் உடற்பயிற்சியாகும். இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் வேகமான நடைப்பயிற்சி செய்வது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. அதே நேரத்தில் இரத்த ஓட்டத்தை சீராக்கி, இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கிறது. மேலும் இதயத் தசைகளை வலுப்படுத்துவதுடன், உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை சமநிலைப்படுத்தவும் நடைப்பயிற்சி உதவுகிறது.

தசை மற்றும் எலும்பு வலிமை: வேகமான நடைப்பயிற்சி தசை வளர்ச்சியை ஊக்குவித்து எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. நடைப்பயிற்சியின் போது உடலின் முழு எடையும் கால்கள் மூலம் தாங்கப்படுவதால், கால்கள், வயிறு மற்றும் முதுகுப் பகுதிகளில் உள்ள தசைகள் இயல்பாகவே செயல்பட்டு வலிமை பெறுகின்றன. இதனால் உடல் முழுவதும் தசை இறுக்கம் மற்றும் உறுதித்தன்மை அதிகரிக்கிறது. மேலும், வயதானவர்களை அதிகமாக பாதிக்கும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களின் அபாயத்தையும் குறைக்க நடைப்பயிற்சி மிகவும் உதவுகிறது.

மனநல மேம்பாடு: உடல் இயக்கம் அதிகரிக்கும் போது உடலில் எண்டார்ஃபின்ஸ் என்ற ஹார்மோனின் சுரப்பு அதிகமாகிறது. இந்த ஹார்மோன் மனநிலையை நேர்மறையாக மாற்றி, மகிழ்ச்சியை அதிகரிக்க உதவுகிறது. இதனால் பதற்றம், மன அழுத்தம் போன்றவை குறைந்து மன அமைதி கிடைக்கிறது. ட்ரெட்மில்லில் நடப்பதை விட, பூங்கா அல்லது கடற்கரை போன்ற இயற்கை சூழலில் நடப்பது மேலும் சிறந்த பலனை தரும். ஏனெனில் இயற்கை வெளிச்சம் உடலுக்கு கிடைப்பதன் மூலம் தூக்கச் சுழற்சி சீராகிறது மற்றும் வைட்டமின் D உடலில் இயற்கையாக உருவாகவும் உதவுகிறது.

ஆய்வுகள் தெரிவிக்கும் நன்மை: தினமும் வெறும் 10 நிமிடங்கள் வேகமான நடைப்பயிற்சி செய்வதன் மூலமே உடல் ஆரோக்கியத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என ஆய்வுகள் கூறுகின்றன. குறிப்பாக, இவ்வாறு தொடர்ந்து நடைப்பயிற்சி மேற்கொள்வதால் இளவயது மற்றும் முன்கூட்டிய இறப்பு அபாயத்தை சுமார் 15% வரை குறைக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. இது உடலின் இதய செயல்பாடு, இரத்த ஓட்டம் மற்றும் ஒட்டுமொத்த உடல் இயக்கத்தை மேம்படுத்துவதன் மூலம் நீண்ட ஆயுளுக்கு உதவுகிறது.

உடல் நெகிழ்வுத்தன்மை மற்றும் வாழ்க்கைத் தரம்: அன்றாடம் நடைப்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் உடலின் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்திக் கொள்ள முடியும். தொடர்ந்து நடப்பது மூட்டுகள் மற்றும் தசைகளின் இயக்கத்தை சீராக்கி, உடல் இயல்பாக இயங்க உதவுகிறது. இதனால் உடலில் ஏற்படும் வலிகள் குறைவதுடன், சிறிய காயங்களிலிருந்து மீளும் வேகமும் அதிகரிக்கிறது. மொத்தத்தில், இத்தகைய உடல் செயல்பாடுகள் ஒருவரின் வாழ்க்கைத் தரத்தை குறிப்பிடத்தக்க அளவில் உயர்த்துகின்றன.

கொழுப்பு எரிப்பு மற்றும் எடை கட்டுப்பாடு: நடைப்பயிற்சி உடலில் உள்ள கொழுப்பை எரிக்க உதவுகிறது. இதன் மூலம் உடல் எடை குறையவும், உடல் பருமன் கட்டுப்பாட்டில் இருக்கவும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் நடைப்பயிற்சியை மட்டும் நம்பி இருக்காமல், அதோடு வலிமை பயிற்சிகளையும் (strength training) சேர்த்து செய்வது மிகவும் அவசியம். இதன் மூலம் தசை இழப்பு தடுக்கப்படுவதுடன், தசை வலிமையும் உறுதியாகும். மேலும், உடல் மெட்டபாலிசம் சீராக செயல்படவும் இது உதவுகிறது.

Source link