ஈரான், அமெரிக்க இடையே 2 வாரம் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பங்குசந்தைகள் உயர தொடங்கி உள்ளதோடு, தங்கம், வெள்ளி விலை உயர்ந்துள்ளது.
சென்னையில் நேற்று தங்கம் விலை ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.130 குறைந்து, ரூ.13,860க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.1040 குறைந்து, ரூ.1,10,880க்கு விற்பனை செய்யப்பட்டது.வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து, ரூ.255க்கு விற்பனையாகிறது. கிலோவிற்கு ரூ. 5 ஆயிரம் குறைந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.2,55,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்றைய தினம் சரிந்த தங்கம், வெள்ளி விலை இன்றும் மீண்டும் உயர்ந்துள்ளது. தங்கம் கிராமுக்கு ரூ. 2,720 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,13,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.340 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போன்று வெள்ளி கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.265-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோவிற்கு ரூ.10 ஆயிரம் உயர்ந்து, ஒரு கிலோ தங்கம் ரூ.2,65,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை ஏற்றம் நகைப்பிரியர்களை மீண்டும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

